சுதந்திர உரிமை - கட்டற்ற மென்பொருளுக்கு உண்டு!
கட்டற்ற அறிவு!- – வின்சென்ட் காபோ
6
சுதந்திர உரிமை!
கணினி புரோகிராம்களை பயன்படுத்துபவர்கள் தம் தேவைக்கேற்ப அதனை
திருத்தி வெளியிடும் சுதந்திர உரிமத்துடன் மென்பொருட்களை ஸ்டால்மன் வெளியிட்டார். இதனை
பிறருக்கு நீங்கள் பிரதி எடுத்து இலவசமாக அல்லது கட்டணத்திற்கோ வழங்கலாம். இதற்கு காப்பிலெஃப்ட்
என்று பெயர்.
இவை ஜிஎன்யு திட்டத்தின்
கீழ் சட்டரீதியில் காப்புரிமையுடன் வழங்கப்பட்டாலும், புரோகிராம்களை மாற்றிப் பயன்படுத்தும்
சுதந்திரம் பயனர்களுக்கு உண்டு. அந்த வித்தியாசத்தை குறிக்கவே காப்பிரைட் என்ற சொல்
காப்பிலெஃப்ட் என்று மாற்றி வழங்கப்படுகிறது.
உலகில் கணினி பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தனக்கென தனி மென்பொருள்
வாங்க வைப்பதே பன்னாட்டு கணினி நிறுவனங்களில் லாபவெறி லட்சியம். அப்டேட் விளம்பரங்கள்,
ஓஎஸ்ஸிற்கான பாதுகாப்பு கோப்புகள் வெளியீடு நிறுத்தம் என்பதெல்லாம் இதையொட்டி வருவதுதான்.
மென்பொருள் உரிமை!
சேட்டன்பகத் நாவல்களின் சராசரி விலை ரூ.176. ஆனால் அவரின் புத்தகத்தை
கிராஸ்வேர்டு, ஹிக்கின்பாதம்ஸ் கடைகளில் வாங்கினால்தான் இந்த ரேட். தி.நகரிலுள்ள பிளாட்பார்ம்களில்
சேட்டன் பகத்தை எழுபது ரூபாய்க்கு வாங்கிவிடலாம். எப்படி? அசலின் நகல்தான் இது.
மென்பொருட்களில் இது செல்லுபடியாகாது. விண்டோஸ், மேக் உள்ளிட்ட
மென்பொருட்களை சோதனை பதிப்பை இலவசமாக இயக்கி பார்த்தாலும் முழுமையாக இயங்கும் பதிப்புக்கு
காசை எண்ணிக் கொடுத்தே ஆகவேண்டும். காப்பி பதிப்பில் இயங்கினாலும் இணையத்தில் கணினியை
இணைத்தால் உடனே நகல் மென்பொருள் பூட்டப்பட்டு விடும். எப்படி? மென்பொருளின் செட்டிங்
அப்படி.
அமெரிக்காவின் காப்பிரைட் சட்டப்படி, மென்பொருள் பதிப்பாளர்
சங்கம் தங்களுடைய மென்பொருளை நகலெடுத்து பயன்படுத்தும் நிறுவனங்களை சோதனையிட உரிமை
உண்டு. சோவியத் யூனியனில் ஜெராக்ஸ் மெஷினுக்கு தகவல்களை பரிமாறிவிடுவார்கள் என போலீஸ்
காவல் போடப்பட்டதாக கூறுவார்கள். ரஷ்யாவின் காவலுக்கு அரசியல் என்றால் அமெரிக்காவில்
மென்பொருட்களை பிரதியெடுக்க தடுப்பதற்கு காரணம் இதன் மூலம் கொட்டும் காசு.
கட்டற்ற மென்பொருட்கள் உரிமங்களை ஜிபிஎன், ஜிபிஎல் என்ற பெயரில்
காப்புரிமை சட்டப்படி அளித்தாலும் நன்கொடை, மென்பொருள் பயிற்சி உள்ளிட்ட முறைகள் மூலம்
தங்களுக்கு தேவையான தொகையை பெறுகின்றனர்.