வேற்றுகிரகவாசிகளை ஆராய்ந்த உளவியலாளர்!
உளவியலாளர் கார்ல் ஜங்க்!
உளவியலாளர் சிக்மண்ட் ஃபிராய்டுக்கு
பிறகு நடத்தை உளவியல் பற்றிய தியரிகளால் புகழ்பெற்றவர்
ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த கார்ல் ஜங்க்(1875-1961).
ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த கார்ல் ஜங்க்(1875-1961).
ஸ்விட்சர்லாந்தின் கெஸ்வில்லில்
பிறந்த கார்ல் ஜங்க் தனிமையில் வாழ்ந்து வளர்ந்த குழந்தை. அவரின் மூன்று வயதிலேயே தாய்
எமிலிக்கு மனநலப்பிரச்னைகள் ஏற்பட்டது.
பாசெல் பல்கலையில் 1900 ஆம் ஆண்டு
பட்டம் பெற்றவர் ஜூரிச் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பர்கோல்ஷில் காப்பகத்தில்
பணியாற்றும்போது குறிப்பிட்ட வார்த்தைகளை சொல்லும் ஏற்படும் வித்தியாச மாற்றங்களை நோயாளிகளிடம்
கண்டறிந்தார். “தந்தையின் ஆளுமையும் தாயின் கண்டறியமுடியாத குணங்களும் எனக்கு இருந்தன.”
என தன்னைப்பற்றியும் கூறிய ஆளுமை இவர்.
ரசவாதம், யோகா என பல்வேறு முறைகளை
ஆராய்ந்து கருத்து கந்தசாமியாக ஒவ்வொன்றுக்கும் கருத்துக்களை மைக் நீட்டாமலேயே பேசி
கண்டனங்களைப் பெற்றார் கார்ல் ஜங்க். Saucers:
A Modern Myth of Things Seen in the Skies(1958)என வேற்றுகிரகவாசிகளைப் பற்றி நூலை எழுதி வெளியிட்டார். பெண்களின்
மீது தீராத காதல் கொண்டவர் 1961 ஆம் ஆண்டு மறைந்தார்.