பசுமை டூர்!





Image result for green tour




சூழல் காக்கும் டூர்!


டூர், பிக்னிக் என ஊர் சுற்றக்கிளம்புவது ஓகே. ஆனால் நாம் அடுத்த ஆண்டு அங்கு செல்ல அந்த இடத்தின் தன்மையை பாதுகாப்பது அவசியம். அதற்காக சில வழிமுறைகள்....

பசுமை விமானங்கள்!

ஜெட் ப்ளூ உள்ளிட்ட பெட்ரோலுடன் பிற உயிரியல் எரிபொருட்களால் இயங்கும் விமானங்கள் உண்டு. முயற்சித்தால் அவற்றை புக் செய்து பறக்கலாம். உலக விமான போக்குவரத்து நிறுவனம், 30 க்கும் மேற்பட்ட குறைந்த கார்பன் வெளியீடு கொண்ட விமானங்களின் செய்திகளை வெளியிட்டுள்ளது. இடைநிறுத்தம் இல்லாத விமானங்களில் பொதுவாக கார்பன் வெளியீடு குறைவு.

ரயிலில் போகலாமா?

விமானங்களில் பயணிப்பதை விட ரயிலில் பயணிப்பது மிக குறைந்த கார்பனை வெளியேற்றும்  என்பதால் அதனை பயன்படுத்தலாம்.  ஐரோப்பா, கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவை ரயில்கள் பிரமாதமாக இணைப்பதால் விமானங்களுக்கு மாற்றாக அதனை பயன்படுத்துவது சூழல் காக்கும் என்கிறார் தி டிராவல் ப்ரீஃப் நிறுவனத்தைச் சேரந்த ஸ்டீவ் லாங். மேற்கூறிய இடங்களில் ரயில், மெட்ரோ, வசதிகளை பயன்படுத்தலாம். இல்லையா? நடந்துபோவதில் வெட்கமில்லை என்றால் நடக்கலாம். தவறில்லை.

நீங்கள் தங்குமிடங்களிலும் பசுமைக்கட்டிட சான்றிதழ் பெற்ற விடுதிகளில் தங்குவது சிறந்த புத்திசாலித்தனம்.  மேலும் துபாய்க்கு போய் தோசை, தொட்டுக்கெள்ள காரச்சட்னி என சரவணபவனில் அடம்பிடிக்காமல் அந்தந்த தேசங்களில் என்ன கிடைக்கிறதோ அதை சாப்பிடுவது நல்லது.

ஹோட்டல்களில் சான்றிதழ் பார்த்து தங்குவது சாத்தியமா? என சோம்பேறித்தனம் பட்டால் ஃபேஸ்புக், ட்விட்டர் பார்த்து பசுமை குழுக்களில் மெம்பர்  ஆனால் போதும். அவர்களை உங்களை பசுமை சுற்றுலாவுக்கு கூட்டிச்சென்று பொறுப்பை குறைப்பார்கள்.

நன்றி: ஈகோவாட்ச் இணையதளம்