பிரேசில் தேர்தலில் வாட்ஸ்அப் அநீதி!




Image result for brazil



பிரேசிலுக்கு வாட்ஸ்அப் உதவி!

லத்தீன் அமெரிக்காவின் ஜனநாயக நாடான பிரேசிலில் முன்னாள் ராணுவ கேப்டனான ஜெய்ர் பொல்சோனாரோ வென்று அதிபராகியுள்ளார்.

தேர்தலுக்கு பத்து நாட்கள் முன்பு 3 மில்லியன் டாலர்களை வாட்ஸ்அப் நிறுவனத்து கொடுத்து போலிச்செய்திகளை பரப்பியுள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. 1991 ஆம் ஆண்டு பிரேசில் தேசிய காங்கிரசில் அங்கம் வகித்து வரும் பொல்சொனாரோ, “அனைத்து இசங்களுக்கும் இனி முடிவு” என்றே திடமாக கூறி ஆட்சிக்கு வந்துள்ளார். 

பிரேசிலின் Folha de São Paulo  பத்திரிகையில் நிருபர் பேட்ரிசியா காம்பஸ் மெலோ இதுகுறித்த செய்தியை அண்மையில் எழுதியுள்ளார். செய்தி பிரசுரமானவுடன் பதறிய பொல்சொனாரோ ஆதரவாளர்கள், பேட்ரிசியாவுக்கு மிரட்டல் அழைப்புகளை விடுத்தனர். 

கடந்தாண்டில் பிரேசில் புலனாய்வு நிருபர்களுக்கு 141 வன்முறை நிகழ்வுகள் நடைபெற்றுள்ளதாக புலனாய்வு நிருபர்கள் சங்கம்(ABRAJI) தெரிவிக்கிறது.

பல்வேறு தவறான புள்ளிவிபரங்கள், உணர்ச்சி கொந்தளிப்பான வாசகங்களை இடையறாது வாட்ஸ்அப்பில் பரப்பி வென்ற பொல்சொனாரோ ஆதரவாளர்களில் கையில் பிரேசில் மக்களின் நலன் உள்ளது.


பிரபலமான இடுகைகள்