ரா 50! - செயல்படுவது எப்படி?
R&AW 50!
ரா அமைப்பின் செயலாளர் முதன்மை
பொறுப்பில் அறிக்கைகளை பிரதமரிடம் சமர்ப்பிக்கும் அதிகாரத்தில் இருப்பார். இவருக்கு
கீழே 4 ஏரியா சிறப்பு செயலர்கள்(பாகிஸ்தான், சீனா மற்றும் தெற்கு ஆசியா, மத்தியகிழக்கு
மற்றும் ஆப்பிரிக்கா, பிறநாடுகள்) என இருப்பார்கள்.
இவர்களுக்கு கீழேயுள்ள கூடுதல்
செயலர்கள் களப்பணிகளை தீர்மானித்து அறிக்கைகளை சிறப்பு செயலர்களுக்கு அனுப்புகிறார்கள்.
இதோடு ரா முதன்மை செயலாளர் சிறப்பு ஆபரேஷன்களுக்கான கூடுதல் செயலர் ஒருவரும் இதில்
உண்டு. இவர்களின் கீழ் பல ரா அமைப்பு அதிகாரிகள்,
தமக்கு கொடுக்கப்படும் ஆணைகளின் படி செயல்படுவார்கள்.
ஐபிஎஸ் அதிகாரிகள், இதன் துணை
அமைப்புகள், பாதுகாப்பு சேவைகளிலுள்ளவர்கள் ரா அமைப்பில் பல்வேறு பணிகளுக்காக பணியமர்த்தப்படுகிறார்கள்.
அங்கு பணிபுரிய விரும்பினால் அப்படியே தொடரலாம். 1971-நேரடியாக பணிநியமனம் இதில் கிடையாது.
பி பிரிவு அதிகாரிகளுக்கு நேரடியான
தேர்வு உண்டு. ஏ பிரிவுக்கு பதவி உயர்வு பெற நீண்டகாலமாகும். பாராமிலிட்டரி அதிகாரிகளும்
இப்பிரிவில் பணிபுரிகின்றனர். 10 வார துப்பறியும் பயிற்சிகளும் மூன்றுவார தற்காப்பு
சண்டை பயிற்சிகளும் உண்டு.