ஸ்டார்ட்அப் மந்திரம் 1 மின்னூல் வெளியீடு!












இந்தியாவில் ஆரவாரமாக தொடங்கப்பட்ட ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் பெரியளவு வெற்றி பெறவில்லை. ஆனால் முத்ரா கடன்களை நம்பி இளைஞர்கள் பலரும் நம்பிக்கை தரும் ஸ்டார்ட்அப் முயற்சிகளை செயல்படுத்த முயற்சித்தனர். அந்த நம்பிக்கையை பரவலாக்க நினைத்தேன். அதன்வழியாக உருவானதுதான் ஸ்டார்ட்அப் மந்திரம் தொடர்.

அமேசான் ஐடியாவை ஃபிளிப்கார்ட்டும் ஏர்பிஎன்பி ஐடியாவை ஓயோவும் எடுத்து லாபம் சம்பாதிப்பதை ஸ்டார்ட்அப் தொழில்முயற்சியாக எடுத்தால் இந்தியாவின் தனித்தன்மை காணாமல் போய்விடும். இந்த நூலில் ஸ்டார்ட்அப் தொழில்முயற்சிகளில் வென்றவர்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள், பணிச்சூழல், கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள், களத்தில் எதிர்கொள்ளவேண்டிய சவால்கள் ஆகியவற்றை  செய்திதாள், வணிக நூல்கள், இணையதளங்களில் சேகரித்து எழுதியுள்ளேன். அதேசமயம் தொழில்முயற்சி என்பது களத்தில் அச்சூழலுக்கு சிறந்ததும், நிறுவனத்தின் எதிர்காலத்தை பாதுகாக்கும் முடிவு எடுக்கவேண்டியது  சிறந்த தலைவர்களின் கைகளிலேயே உள்ளது.

இருபகுதிகளாக வெளியிடப்படவுள்ள ஸ்டார்ட்அப் மந்திரத்தின் முதல்பகுதி இது.


https://tamil.pratilipi.com/story/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-1-3Dp1xpzhhFVR?utm_source=transactional&utm_medium=email&utm_campaign=pratilipi_published_author&utm_content=cta_pratilipi_page_button

வாசியுங்கள்; விமர்சியுங்கள்.

நன்றி!




பிரபலமான இடுகைகள்