ஜெர்மனியர்களின் வைரஸ் எதிர்ப்பு செல்!
பிட்ஸ்!
1863 ஆம் ஆண்டிலேயே வெனிசுலா நாட்டில்
குற்றங்களுக்கு மரணதண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது.
உலகில் நடந்த பல்வேறு ஆய்வுகளில்
அடிப்படையில் மக்களால் அதிகம் விரும்பப்படும் நிறம் நீலம் என தெரியவந்துள்ளது.
உலகை கொள்ளை கொண்ட கார்ட்டூன்
கதாபாத்திரமான டிஸ்னி மிக்கி மௌஸின் அக்கா பெயர், அமேலியா ஃபீல்டுமௌஸ்.
ஸ்வீடன், நார்வே ஆகிய நாடுகளில்
பனிரெண்டு வயதுக்கு குறைந்த குழந்தைகளை விளம்பரத்தில் நடிக்கவைப்பது சட்டப்படி குற்றம்.
நூறு ஜெர்மனியர்களில் ஒருவருக்கு
எய்ட்ஸ் நோய்க்கு எதிரான மரபணுரீதியான பாதுகாப்பு உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டது.
இந்த மரபணுவுக்கு CCR5-delta
32 என்று பெயர்.
1989 ஆம் ஆண்டு டிச.17 தேதியிலிருந்து
ஒளிபரப்பாகும் தி சிம்ப்சன்ஸ் அனிமேஷன் கதையில் கதாபாத்திரங்களுக்கு நான்கு விரல்கள்
மட்டுமே உண்டு. தி காட் என்ற கேரக்டருக்கு மட்டும் ஐந்து விரல்கள் இருந்தது. இன்றுவரை
644 அத்தியாயங்கள் ஃபாக்ஸ் டிவியில் ஒளிபரப்பாகியுள்ள ஹிட் அனிமேஷன் கதை இது.