இடுகைகள்

இன்டர்நெட் ஆஃப் அனிமல்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இன்டர்நெட் ஆஃப் அனிமல்ஸ் என்பது ஆச்சரியகரமானது! - மார்ட்டின் விக்கெல்ஸ்கி

படம்
  மொழிபெயர்ப்பு நேர்காணல் மார்ட்டின் விக்கெல்ஸ்கி விலங்கியலாளர் ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் விலங்குகளின் குணங்கள் ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநராக மார்ட்டின் விக்கெல்ஸ்கி உள்ளார். இவர் உருவாக்கிய சிந்தனைதான், ஐகாரஸ். இன்டர்நேஷனல் கோ ஆப்பரேஷன் ஃபார் அனிமல் ரிசர்ச் யூசிங் ஸ்பேஸ். 20 ஆண்டுகளுக்கு முன்னரே இக்கருத்தை உருவாக்கினார் மார்ட்டின். இப்போதுதான், ஜெர்மனி மற்றும் ரஷ்யா விண்வெளி அமைப்புகள் இதற்கு ஆதரவை வழங்கியுள்ளன. 2020ஆம் ஆண்டு பிளாக்பேர்ட் பெலாரஸிலிருந்து அல்பேனியாவிற்கு, 1530 கி.மீ. தொலைவுக்கு பயணித்தது. இதனை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் கண்காணித்தது. இதற்கு காரணம், அதன் உடலில் பொருத்திருந்த ட்ரான்ஸ்மீட்டர்தான்.  ஐகாரஸ் திட்டத்தில் நீங்கள் கண்டுபிடித்த விஷயம் என்ன? ஐரோப்பிய ஈல் எப்படி இனப்பெருக்கம் செய்கிறது, ஐரோப்பிய நாரைகள் 70 சதவீதம் அழிவது ஏன் என்ற கேள்விகளுக்கு விடைகளை அறிந்தோம். இதற்காக,  15 ஆயிரம் நாரைகளுக்கு நாங்கள் டேக்குகளை பொருத்த முடிவு செய்தோம். நாரைகள் திடீரென பெரும் எண்ணிக்கையில் இறந்துபோவதை நினைத்துப் பாருங்கள். இவை, காடுகளில் இப்படி இறந்துகிடப்பதை யாரும் பார்