இடுகைகள்

ஆபாச வலைத்தளங்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விபிஎன் பயன்படுத்தினால் குற்றமா?

படம்
விபிஎன் பயன்படுத்தினால் குற்றமா? அண்மையில் காஷ்மீரில் மக்கள் இணையம் வழியாக சமூக வலைத்தளங்களை அணுகுவது தேசதுரோகச் செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபிஎன் மென்பொருட்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. விபிஎன் என்பதை தவறான மென்பொருள் கிடையாது. இதனை இன்ஸ்டால் செய்து அரசு தடைசெய்த அஜூக்கு குமுக்கு வலைத்தளங்களை பார்வையிட முடியும்.  ரகசியமான தகவல்களை, கோப்புகளை அனுப்ப இந்த மென்பொருட்களை உலகம் முழுக்க பயன்படுத்துகின்றனர். இந்தியா இப்பட்டியலில் 43 சதவீதம் எனும் எண்ணிக்கையை எட்டிப்பிடித்து இரண்டாமிடத்தில் இருக்கிறது. குற்றம் என்றவுடன் பயந்துவிடாதீர்கள். இந்தியாவில் விபிஎன் பயன்படுத்துவதை தடுக்கும் எந்த சட்டமும் இயற்றப்படவில்லை. ஏனெனில் இந்த வசதியை பல்வேறு பன்னாட்டு, இந்திய நிறுவனங்களும் பயன்படுத்தி வருகின்றன. இதைப்பயன்படுத்தி தமிழ்ராக்கர்ஸை கூட அணுகி புதிய படங்களைப் பார்க்க முடியும்.  இங்கிலாந்தில் அல்லது பிற ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும்போது விபிஎன்னைப் பயன்படுத்தி அமெரிக்காவில் மட்டும் வெளியாகும் இணையத் தொடர்களைப் பார்க்கலாம். சீனாவில் கூட பல்வேறு பாதுக

தடைகள் ஜனநாயக நாட்டை உருவாக்காது - சேட்டன் பகத்!

படம்
ஆபாச வலைத்தளங்களுக்கு தடை உதவாது! இந்திய அரசு, ஆபாச வலைத்தளங்களைத் தடைசெய்து உத்தரவிட்டது எனக்கு கடும் அதிர்ச்சியை அளித்தது. காரணம் வளர்ந்த ஜனநாயக நாடுகள் இதுபோன்ற தடைகளை மக்கள் மீது விதிப்பதில்லை. காரணம், ஒன்றைப் பார்ப்பது, பார்க்காமல் இருப்பது என்பது தனிநபர் சுதந்திரம் தொடர்பானது. அதில் பெரும்பாலான உலக நாடுகள் தலையிடுவதில்லை. மக்களுக்கு பெரும் பிரச்னையாக இருப்பது,போதைப்பொருள் விற்பனை, ஆபாசப் படங்களில் குழந்தைகளை நடிக்க வைப்பது போன்றவைதான். இவற்றை அரசு சட்டங்கள் மூலம் தடுப்பது பயனளிக்கும். ஆனால் அரசு மக்கள் முடிவெடுக்கவேண்டிய விஷயங்களில் தடை போன்றவற்றை கொண்டு வரக்கூடாது. காரணம், நாம் இஸ்லாமிய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. இன்றுள்ள தொழில்நுட்பபடி, அரசின் தடை உத்தரவை மிக எளிமையாக உடைத்தெறிய முடியும். இதனை அரசு உணர்ந்திருக்கிறதா என்று தெரியவில்லை. உலகமயமாதல், தாராளமயமாக்கல் விதிகளால் உலகம் என்பது நெருக்கமாகி வருகிறது. இதில் எல்லைக்கோடுகள் நிலப்பரப்பில்தானே ஒழிய இணையத்தில் கிடையாது. இந்த நேரத்தில் மக்களின் தனிநபர் சுதந்திரத்தில் தடை என்பது தேவையி