விபிஎன் பயன்படுத்தினால் குற்றமா?
விபிஎன்
பயன்படுத்தினால் குற்றமா?
அண்மையில்
காஷ்மீரில் மக்கள் இணையம் வழியாக சமூக வலைத்தளங்களை அணுகுவது தேசதுரோகச் செயலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விபிஎன் மென்பொருட்களையும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
விபிஎன்
என்பதை தவறான மென்பொருள் கிடையாது. இதனை இன்ஸ்டால் செய்து அரசு தடைசெய்த அஜூக்கு குமுக்கு
வலைத்தளங்களை பார்வையிட முடியும். ரகசியமான தகவல்களை, கோப்புகளை
அனுப்ப இந்த மென்பொருட்களை உலகம் முழுக்க பயன்படுத்துகின்றனர். இந்தியா இப்பட்டியலில்
43 சதவீதம் எனும் எண்ணிக்கையை எட்டிப்பிடித்து இரண்டாமிடத்தில் இருக்கிறது.
குற்றம்
என்றவுடன் பயந்துவிடாதீர்கள். இந்தியாவில் விபிஎன் பயன்படுத்துவதை தடுக்கும் எந்த சட்டமும்
இயற்றப்படவில்லை. ஏனெனில் இந்த வசதியை பல்வேறு பன்னாட்டு, இந்திய நிறுவனங்களும் பயன்படுத்தி
வருகின்றன. இதைப்பயன்படுத்தி தமிழ்ராக்கர்ஸை கூட அணுகி புதிய படங்களைப் பார்க்க முடியும்.
இங்கிலாந்தில் அல்லது பிற ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும்போது விபிஎன்னைப் பயன்படுத்தி
அமெரிக்காவில் மட்டும் வெளியாகும் இணையத் தொடர்களைப் பார்க்கலாம். சீனாவில் கூட பல்வேறு
பாதுகாப்பு வளையங்களைத் தாண்டி அங்குள்ள வலைத்தளங்களை விஷயங்களை விபிஎன் மூலம் பார்க்க
முடியும்.
அனைத்து
மக்களையும் கவர்ந்தது டர்போ விபிஎன் மென்பொருள்தான். அதற்கடுத்து, சோலோ விபிஎன், ஹாட்ஸ்பாட்ஷீல்டு
விபிஎன் ஆகிய மென்பொருட்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் இலவசம்.
அதற்குப்பதிலாக உங்களிடமிருந்து
என்ன விஷயங்களை உருவுவார்கள் என்று யாருக்கும் தெரியாது.
காசு
கொடுத்து விபிஎன்னைப் பயன்படுத்தும் வசதிகளும் உண்டு. இந்தவகையில் எக்ஸ்பிரஸ் விபிஎன்
வசதி சிறப்பாக செயல்படுகிறது. அடுத்த நிலையில் நார்டு விபிஎன் வசதி உள்ளது.
நன்றி
– டைம்ஸ்