இடுகைகள்

நமது தோள்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறுவர் காப்பக சிறுவர்களை தொழில்முனைவோர்களாக்கும் மாணிக்க பாரதி! - நமது தோள்கள் அறக்கட்டளையின் அரிய பணி

படம்
  மாணிக்க பாரதி, சமூக செயல்பாட்டாளர். இப்படி ஒற்றை வரியில் ஏதாவது சொன்னால் யாருக்குமே புரியாது அல்லவா? இவர் காப்பகத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளை தொழில்முனைவோராக்க பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறார். இதற்கு அரசின் சமூக பாதுகாப்புத்துறையின் ஆதரவும் உதவியும் கிடைத்துள்ளது. பேக் அண்ட் சேஞ்ச் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி குழந்தைகளின் எதிர்காலத்தை மாற்றியமைக்க முயன்று வருகிறார்.  தனது பேக்கரியில் உள்ள உணவுவகைகளை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்து அவர்களை இத்தொழிலுக்கு வர உதவி வருகிறார். இதில் ஐந்து பேர்களுக்கு தனது நிறுவனத்தில் வேலை கொடுத்துள்ளார். 2017ஆம் ஆண்டு பேக்கரி கல்வித் திட்டத்தை தொடங்கியபோது ஒரு மாணவர்தான் இதில் இணைந்திருந்தார். மாணிக்க பாரதிக்கு, குழந்தைகளுக்கு ஏதேனும் சொல்லித் தரவேண்டும் எப்போது தோன்றியது? அதற்கு சோகமான முன்கதை 2015ஆம் ஆண்டில் அவரது சகோதரி இறந்துபோனார். கடைசி வார்த்தையாக உன்னை உயிர்ப்போடு வைத்திருக்கும் விஷயங்களைச் செய் என்று சொல்லியிருக்கிறார். அதற்குப்பிறகுதான் அரசு அமைப்புகளோடு இணைந்து மக்களுக்கு வாழ்க்கைத்திறன்களை சொல்லிக்கொடுக்கும் பணிகளை செய்யத் தொடங்கிய