அகதி வாழ்க்கையின் வலி, வேதனைகளைக் கூறும் கவிதை நூல்!

 


மரண வீட்டின் முகவரி

அ சி விஜிதரன்

சிந்தன் புக்ஸ்

150 ரூபாய் 


இது ஒரு கவிதை நூல். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து அகதி முகாமில் வாழும் நிலை ஏற்பட்ட ஒருவர் தனது மனப்புழுக்கங்களை கவிதையாக எழுதியுள்ளார். இந்த நூலில், முகாமின் நிலை, அங்கு அகதிகள் நடத்தப்படும் நிலை, அங்குள்ள அறைகள் எப்படி கட்டப்பட்டுள்ளன, அதிகாரிகள் எப்படி பேசுவதற்கு எழுதுவதற்கு கூட தடை விதிக்கிறார்கள், பெயர்கள் இல்லாமல் எண்களை அடையாளமாக வைத்து மனிதர்களை அழைப்பது, இப்படியான இடம்பெயர்வு வாழ்க்கையில் பிற மனிதர்களுக்கு நடைபெறும் காதல், திருமணம் பற்றியெல்லாம் யோசிக்கவே முடியாமல் போவது என நிறைய விஷயங்களை கனமான வலி நிரம்பிய வார்த்தைகளை வைத்து எழுதியிருக்கிறார். 


எக்ஸ் - ட்விட்டரில் சிலர் தேநீர் கவிதைகளை எழுதுவார்களே அதுபோலத்தான் இந்த கொட்டடி கவிதைகள் என புரிந்தகொள்ளலாம். தங்குமிடம் தவிர்த்து, பேனா, பென்சில், பேப்பர் கவிதைகளில் அதிகம் இடம்பிடிக்கிறது.இந்த கவிதை நூல் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. கவிதைகளை எழுதியவரே உள்பக்க வடிவமைப்பை செய்திருக்கிறார். அட்டை வடிவமைப்பு லார்க் பாஸ்கரன். அட்டை சிறப்பாக உள்ளது. 


இப்போது கவிதை வரிகளைப் பார்ப்போம். நீங்கள் பேறு பெற்றவர்கள்/ நான் அபாக்கியவாதி


எப்படி இருந்து எழுதினாலும் எழுதும்/எழுதியவை நிலைத்து நிற்காது/


நீங்கள் கேட்க கேள்வி ஏதாவது? - பதில்கள் மட்டும் சொல்ல பழக்கப்பட்டவன் நான்


அரச அதிகாரம் ஒருவரின் வாழ்க்கையில் மட்டுமீறிய அதிகாரம் செலுத்தினால் ஒருவர் கேள்வி கேட்க முடியாது. பாருங்கள் இன்றைய இந்திய நிலைமையை, அரசியல் கார்டூன் வரைபவர்கள் எக்ஸ் கணக்குகள் முடக்கப்படுகின்றன. போராட்டங்களுக்கு அதிகாரப்பூர்வ அங்கீகாரமே கிடையாது. இந்து தேசியவாதத்திற்கு, கண்மூடித்தனமான வன்முறைக்கு, முஸ்லீம்களை, கிறித்தவர்களை, பழங்குடியினரை, வடகிழக்கு மாநில மக்களை ஏன் தாக்குகிறாய் என்று கேட்டால் உடனே அப்படி கேட்பவர்கள் தேசவிரோதிகள் ஆகிவிடுகிறார்கள். இப்படி முத்திரை குத்துபவர்களே கைபர் கணவாய் கூலிப்படைதானே? அதை சாதுரியமாக மறந்துவிடுகிறார்கள். 


மரங்கள் அற்ற குருவிகளின் வீடு/ கூண்டுகள்


நான் சாவுகளை மொழிபெயர்க்கப் போகிறேன்/ ஒரு நிமிடம் பிணங்கள் வாசிக்கும்தானே?


என்றும் வராத வசந்தத்தைப் பற்றி/ பாட நினைக்கிறேன் 


நீங்கள் கவலைப்படாதீர்கள்/ நான் எழுதுவதற்கு/ அதிகம் இல்லை



குறுக்கப்பட்ட இடத்தில் / நெடுங்கவிதைகளை எழுதுவதற்குப் பதில் / இடத்திற்கு ஏற்ற / சொற்களை மட்டும் நிரப்பிவிட்டு / விட்டுவிடுகிறேன் / புரிகிறதா?


ஆங். இதயமில்லாத இடத்தில் நீங்கள் தட்டுவதை நிறுத்தலாம்



நிறைய கவிதைகளின் விஜிதரனின் நிராசை, விரக்தி, கோபம், கட்டற்ற அரசதிகாரத்தால் மனிதர்கள் அடிமையாக்கப்படுவது, வெளியுலகம் காணாத காற்றோட்டம் இல்லாத கொட்டடியில் அதாவது அறையில் அடைக்கப்படுவது பற்றி எழுதப்பட்டுள்ளது. 


என்னதான் வாழ்வை கவிதைகளாக சுருக்கி எழுதினாலும் கூட அவை முற்றாக அந்த உண்மையை கூறிவிடுகிறதா என்ன? எனவேதான், வார்த்தைகளும் ரத்தம் சிந்துவதில்லை என்று ஓரிடத்தில் எழுதுகிறார். நடுங்கும் கைகள், நிமிர முடியாத கண்கள் என்று ஓரிடத்தில் வரையறுக்கிறார். 


இந்த கவிதை நூலை வாசித்த பிறகு மரண வீட்டின் முகவரிக்கு சரியாக சென்று சேர்ந்துவிடுவீர்கள். 


இலங்கை தமிழ் அகதிகளின் வாழ்க்கை தனித்துயர்களை சிறப்பாக வெளிப்படுத்துகிற கவிதை நூல்களில் ஒன்று. 



கோமாளிமேடை குழு


#கவிதை #விஜிதரன் #இலங்கை #அகதி #முகாம் #அரசதிகாரம் #பேச்சு #எழுத்து #பென்சில் #திருமணம் #பதில்கள் #க்யூ பிராஞ்சு #கொட்டடி #தனிமை #விரக்தி #நிராசை


#poem #srilanka #tamils #refugee #camp #pain #life #rights #human life #marriage #mind #society #literature #power #pencil #paper #frustration



https://www.commonfolks.in/books/a-c-vijidharan




 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

செக்ஸ் அண்ட் ஜென்: ஆபாச படமா? உணர்வுபூர்வ படமா?

இன்ஸ்டாமில் செக்ஸ் தொழில் ஜரூர்!

செக்ஸ் இண்டஸ்ட்ரி சீக்ரெட் என்ன?