இடுகைகள்

பற்பசை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிரச்னையின் பூதாகரமும், பெண்களின் குற்றவுணர்ச்சியை தூண்டுவிடுதலும் விற்பனையைக் கூட்டும்!

படம்
  பற்களை துலக்காமல் அலுவலகத்திற்கு சென்றிருக்கிறீர்களா? அப்படி மறந்த நாள் முழுக்க வாய் நாற்றம் அடிக்குமோ, பற்களில் உள்ள ஊத்தை வெளியே தெரிந்துவிடுமோ என்று நினைத்து பயந்திருக்கிறீர்களா? இப்படி பயத்தை உருவாக்கி வெல்வதுதான் பெருநிறுவனங்களின் சாதனை. பழங்காலத்தில் வேப்பங்குச்சி, கரி என்று பல் துலக்கிய ஆட்களை அதெல்லாம் தவறு என்று கூறி, பிறகு அதே பொருட்களின் சாரத்தை பற்பசையாக்கி ‘பற்களுக்கு மிகவும் நல்லது’ என்று சொல்லி நிறுவனங்கள் விற்று வருகின்றன. கோல்கேட் தொடங்கி சென்சோடைன் தொடங்கி விளம்பரங்களை எப்படி எடுத்து மக்களுக்கு காண்பிக்கிறார்கள். இதிலுள்ள மூன்று கோட்பாடுகளைப் பார்ப்போம். அன்று தொடங்கி இன்றுவரை இந்த விதிகள் மாறவே இல்லை. 1.பிரச்னையை அடையாளம் கண்டு கூறவேண்டும் 2.அதை மிகப்பெரியதாக்கி பதற்றம் ஏற்படுத்தவேண்டும் 3. தீர்வைக் கூறவேண்டும் பற்பசை விளம்பரங்கள் மேற்சொன்ன மூன்று அம்சங்களைத்தான் கடைபிடிக்கின்றன. ஈறுகளில் ரத்தக்கசிவு, பற்கள் சொத்தையாதல், வலி, கூச்சம் என்று கூறி இருமுறை பற்களை துலக்கவேண்டும் என்று சொல்லி பற்பசையை விற்கிறார்கள். இதிலும், குழந்தை, இளைஞர்கள், குடும்பஸ்தர்கள், ப

பற்பசையில் எதற்கு இனிப்பு சேர்க்கிறார்கள்?

படம்
giphy மிஸ்டர் ரோனி பற்பசையில் எதற்கு இனிப்பு சேர்கிறார்கள்? காலையில் எழுந்து பல் விளக்கும்போது நிறையப்பேர் அதன் காரத்தன்மையை மட்டுமே கவனிப்பார்கள். ஆனால் அவற்றை மறைக்கும் உத்தியாக இனிப்பை சேர்த்திருப்பார்கள். இதனால் பெரும்பாலான பற்பசைகள் இனிப்பைச் சேர்த்திருப்பார்கள். சிலர் மட்டும் பரிசோதனை முயற்சியாக இனிப்பின்றி காரத்தன்மையோடு பற்பசையை உருவாக்கி இருப்பார்கள்.  இனிப்புச்சுவைக்காக சார்பிட்டால், ஸைலிட்டால் ஆகிய வேதிப்பொருட்கள் பற்பசைகளில் சேர்க்கப்படுகின்றன.இவை பற்பசையின் ஈரத்தன்மை கெடாமல் பார்த்துகொள்கிறது. இதனால்தான் பேஸ்ட் வெளியே வந்தபின்பு எளிதில் உலர்வதில்லை.  நன்றி - பிபிசி