இடுகைகள்

இன்சுலின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிறந்த கண்டுபிடிப்புகள் 2023!

படம்
  சிறந்த கண்டுபிடிப்புகள் 2023 ட்ரீ டேக்  காட்டுத்தீயால் அழியும் மரங்களை காப்பாற்றுவதற்கான முயற்சி. இதில், ட்ரீ டேக் என்பது ஏஐ, சென்சாரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது. இதை மரத்தில் பதித்து வைக்க வேண்டும். ஒரு மரத்தின் அடிப்படையான தன்மைகள், நீரின் அளவு, ஒளிச்சேர்க்கை ஆகியவற்றைக் கணிக்கிறது. தகவல்களை சேமிக்கிறது. மரங்கள் பேசும் மொழியை ட்ரீடேக் மொழிபெயர்க்கிறது என்கிறார் ட்ரீடேக் நிறுவனத்தின் இயக்குநர் கிரகாம் ஹைன். உங்கள் வீட்டுத்தோட்டத்தில் உள்ள மரங்கள், செடிகளுக்கும் கூட இதை முயன்று பார்க்கலாம்.  பியானோ தரமான பியானோக்களைத் தயாரிக்கும் ரோலாண்ட் நிறுவனத்திற்கு வயது 50. எனவே, ஸ்பெஷலாக நான்கு பியானோக்களை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர். இதில் இசை ஏற்கெனவே பதிவாகியிருக்கும். 360 டிகிரியில் இசையைக் கேட்கலாம். இதை வைத்து மாணவர்களுக்கு இணையத்தில் பாடம் கூட எடுக்கலாம். வின்டேஜ் தன்மையில் கவனம் ஈர்க்கும் பியானோ. ஆர்க்  ப்ரௌசர்  இணையம் நிறைய மாறிவிட்டது. மாறாதது இணைய உலாவிகள்தான். அதாவது ப்ரௌசர்கள். அதை மாற்றவே ஆர்க் வந்துள்ளது. இதை ஏற்கெனவே டெக் வல்லுநர்கள் பயன்படுத்திவிட்டு ஆகா, ஓகோ

இடைவேளை விட்டுத் தொடரும் உண்ணாவிரதம் - உடல் எடையை கணிசமாக குறைக்கிறது!

படம்
  உடல் எடையைக் குறைக்கும் உண்ணாவிரதம் ஒருவர் மூன்று வேளை உணவு உண்டாலும் மாதம் ஒருமுறை மூன்று வேளை உணவுகளில் ஒருவேளையை தியாகம் செய்து உண்ணாவிரதம் கடைபிடிக்கலாம். இதன் மூலம் கிடைக்கும் பயன்கள், உடலிலுள்ள நச்சுகள் வெளியேறுவது, அடுத்து உடலின் செரிமான மண்டலம் சீராவது. ஒருவர் முழுநாளும் உண்ணாவிரதம் இருக்கிறார் என்றால் அது சற்று கடுமையானது. அதற்கென பயிற்சி செய்து அதைக் கடைபிடிக்கலாம். இன்டர்மிட்டர் ஃபாஸ்ட் எனப்படும் உண்ணாவிரதம் பதினாறு மணிநேரம் தொடங்கி சில நாட்கள் வரை நீள்கிறது. இதில் உணவு என்பது முழுமையாக நீக்கப்படுவதில்லை. அதற்குப் பதில் திரவ ஆகாரங்கள், பழங்கள் ஆகியவற்றை உண்ணலாம். பிறகு உண்ணாவிரதத்தைத் தொடரலாம். மூன்று வேளை உணவுண்டு பழகியவர்களுக்கு இந்த முறை ஏற்றது.   அமெரிக்கர்கள் மத்தியில் இன்டர்மிட்டன் ஃபாஸ்ட் தீவிரமாகி வருகிறது. வெறுமனே டிரெண்டிங் என்பதாக அல்ல. அதில் பயனும் கிடைக்கிறது. எந்த டயட்டைக் கடைபிடித்தாலும் இடைவேளை விட்டுத் தொடரும்  உண்ணாவிரதம் மூலம் அவர்களுக்கு எடை குறைகிறது என்று கூறுகிறார்கள்.  நீரிழிவு நோயாளிகளுக்கும் இன்டர்மிட்டன் ஃபாஸ்ட் உதவுகிறது என்பது ஆச்சரியமான சமாச்ச

ஸிஸோபெரெனியாவால் நோயாளிகளைக் கொல்லத் தொடங்கிய செவிலியர் - பாபி

படம்
  அமெரிக்காவின் இலினாய்ஸில் பிறந்த பெண்மணி. கூச்ச சுபாவம் கொண்ட உடல் பருமனான குழந்தை. இவருக்கு ஏழு சகோதரர்கள் உண்டு என்றாலும் அனைவருமே தசை சிதைவு குறைபாடு கொண்டவர்கள். இதில் இரண்டுபேர் இளம் வயதிலேயே இறந்துவிட்டனர். பாபியைப் பொறுத்தவரை கூச்ச சுபாவி என்பதால் அவரை எங்குமே பார்க்க முடியாது. அவரை உற்சாகமாக ஒருவர் பார்க்க வேண்டுமென்றால் ஞாயிறுதோறும் தேவாலயத்தில் இனிய குரலில் பாடல்களை பாடுவது, கருவிகளை இசைப்பது என அந்த தருணங்களில் மட்டுமே பார்க்கலாம். மதம் தொடர்பான விஷயங்களில் தீவிர ஈடுபாடு கொண்டவர். 1973ஆம் ஆண்டு பள்ளிப்படிப்பை முடித்தவர், செவிலியராக வேலை பார்க்க நினைத்து அந்த படிப்பை எடுத்து படித்தார். குடும்பமே நோய் பாதிப்பு கொண்டிருந்த தால் பாபியின் வேலையும் அதைச் சார்ந்தே மாறியது.படிப்பை முடித்து தன்னை செவிலியராக பதிவு செய்துகொண்டார். பின்னாளில் டேனி என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆசைத் திருமணத்திற்குப் பிறகுதான், தன்னால் பிள்ளை பெற முடியாது என்ற உண்மையை அறிந்தார். வேறுவழியின்றி , தனது கணவருடன் சேர்ந்து ஆண் குழந்தையை தத்தெடுத்தார். ஆனால் நன்றாக வளர்ந்து வந்த அவனுக்குமருந்து கொடுத்ததி

இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டு நூறாண்டு ஆகிறது!- ஜனவரி 11

படம்
  சார்லஸ்,பிரடெரிக் படம்: இந்து தமிழ் இன்சுலின் கண்டுபிடிக்கப்பட்டு நூறாண்டானதை எப்போதும் போல முந்திக்கொண்டு ஆனந்த விகடனின் அகஸ்டஸ் எழுதிவிட்டார். இருந்தாலும் அதன் முக்கியத்துவத்தைக் கருதி மீண்டும் ஒருமுறை அதனை சுருக்கமாக பதிவு செய்கிறோம்.  நூறாண்டுகளுக்கு முன்னர், ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்துவிட்டால் அவரை புற்றுநோய் வந்தவர்கள் போலவே பார்ப்பார்கள். என்ன பாவம் பண்ணினியோ போச்சு உசுரு போச்சு என பாவப்பார்வை பார்த்து நொட்டுப் பேச்சு பேசுவார்கள். அவர்கள் பொய்யாக வருந்திய விஷயம் உண்மைதான்.  குறைபாடு கண்டுபிடிக்கப்பட்ட மிகச்சில மாதங்களில் நோயாளி இறந்துபோய் கல்லறை வாசகங்களை தேடி பொறித்து விடுவார்கள். ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. இன்சுலின் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. நோயாளி உணவுக்கட்டுப்பாடுடன் இருந்தால் நிறைய ஆண்டுகள் வாழலாம்.  கணையத்தில் சுரக்கும் இன்சுலின்தான் இப்படி இறப்புக்கு காரணம் என்பதை எட்வர்ட் ஆல்பெர்ட் ஷார்ப்பி ஹாபர் என்பவர் கண்டுபிடித்தார். இன்சுலின் என்ற வார்த்தையே இவரது உபயம்தான். 1921ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த மருத்துவர் ஃபிரடெரிக் பாண்டிங் என்பவர், கணையத்திலிருந்து