இடுகைகள்

பிரச்னைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காசு, பணம், புகழ், கஞ்சா! - போதைப்பொருட்களை சட்டப்பூர்வமாக்கலாமா?

படம்
    கஞ்சா     உலகில் பல்வேறு நாடுகள் கஞ்சாவை, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளன. இதன்மூலம் இதுதொடர்பான குற்றங்கள் குறைவதோடு, அரசுக்கும் வருமானம் கிடைக்கும். இதுதொடர்பான தகவல்களைத்தான் இப்போது நீங்கள் படிக்கப்போகிறீர்கள்..    உலகம் முழுக்க 120 நகரங்களில் கஞ்சா சார்ந்த போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. அதில் இந்தியாவில் மும்பைக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது.  2018ஆம் ஆண்டு மட்டும் 3.1 கோடிப்பேர் போதைப்பொருட்களை பயன்படுத்தியுள்ளனர். 1. 3 கோடிப்பேர் கஞ்சா மற்றும் ஹாஸ் என்ற பொருளை போதைக்காக பயன்படுத்தினர்.  டில்லியில் கஞ்சா உள்ளிட்ட பொருட்களை சட்டரீதியாக அங்கீகரித்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.725 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும்.  இந்தியாவில் போதைப்பொருட்கள் தடுப்பு சட்டம் 1985படி கஞ்சாவை பயன்படுத்துவர்களுக்கும், அதைச் சார்ந்த பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கும் சிறைதண்டனை, அபராதம் விதிக்கப்படுகிறது.  கஞ்சாவில் டெராஹைட்ரோகன்னாபினோல் என்ற பொருள் உள்ளது. இதுவே இதனை உட்கொள்பவர்களுக்கு மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கஞ்சாவில் 400க்கும் மேற்பட்ட பகுதிப்பொருட்கள் உண்டு.இதிலுள

நச்சு உணவு பாதிப்பு என்ன?

படம்
உணவு விஷமானால்..... தள்ளுவண்டிக் கடையில் சரவணன் அண்ணன் விற்கும் மீன்குழம்பை சோற்றுடன் ஒரு வெட்டு வெட்டுகிறீர்கள். ஆனால் தின்றபின்தான், தெரிகிறது குழம்பு கெட்டிருக்கிறது என. ஆம் இந்த இடத்தில்தான் உணவு விஷமாகிறது. இதனை சரிசெய்ய உடல் என்ன செய்கிறது? வாந்தி, வயிற்றுப்போக்கு. இதற்குள் விஷ உணவு வெளியே வந்துவிட்டால் சரி. இல்லையென்றால் ஆஸ்பத்திரக்கு சென்று சிகிச்சை செய்வதே ஒரே வழி. சாதாரணமாக சால்மோனெல்லா, கேமிலோபாக்டர் ஆகிய பாக்டீரியாக்கள் பொதுவாக உணவு மூலம் உடலுக்குள் சென்று குடலைத் தாக்குகின்றன. மூளை இதனை வெளியேற்றவே வாந்தியை உருவாக்குகிறது. நன்றி: பிபிசி