காசு, பணம், புகழ், கஞ்சா! - போதைப்பொருட்களை சட்டப்பூர்வமாக்கலாமா?

 

 

Marijuana, Cannabis, Weed, Bud, Green, Pot, Medical
கஞ்சா

 

 

உலகில் பல்வேறு நாடுகள் கஞ்சாவை, சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளன. இதன்மூலம் இதுதொடர்பான குற்றங்கள் குறைவதோடு, அரசுக்கும் வருமானம் கிடைக்கும். இதுதொடர்பான தகவல்களைத்தான் இப்போது நீங்கள் படிக்கப்போகிறீர்கள்.. 

 

உலகம் முழுக்க 120 நகரங்களில் கஞ்சா சார்ந்த போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது. அதில் இந்தியாவில் மும்பைக்கு ஆறாவது இடம் கிடைத்துள்ளது. 

2018ஆம் ஆண்டு மட்டும் 3.1 கோடிப்பேர் போதைப்பொருட்களை பயன்படுத்தியுள்ளனர். 1. 3 கோடிப்பேர் கஞ்சா மற்றும் ஹாஸ் என்ற பொருளை போதைக்காக பயன்படுத்தினர். 

டில்லியில் கஞ்சா உள்ளிட்ட பொருட்களை சட்டரீதியாக அங்கீகரித்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.725 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும். 

இந்தியாவில் போதைப்பொருட்கள் தடுப்பு சட்டம் 1985படி கஞ்சாவை பயன்படுத்துவர்களுக்கும், அதைச் சார்ந்த பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கும் சிறைதண்டனை, அபராதம் விதிக்கப்படுகிறது. 

கஞ்சாவில் டெராஹைட்ரோகன்னாபினோல் என்ற பொருள் உள்ளது. இதுவே இதனை உட்கொள்பவர்களுக்கு மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கஞ்சாவில் 400க்கும் மேற்பட்ட பகுதிப்பொருட்கள் உண்டு.இதிலுள்ள கன்னாபிடியோல் என்ற பொருள் டிஹெச்சி யின் பாதிப்பைக் குறைக்க பயன்படுகிறது. 

கஞ்சா

 இதனை வீட் என்கின்றனர். செடியிலுள்ள பூவை,இலையை, விதையை  அரைத்து இப்பொருள் பெறப்படுகிறது. இதற்கு பாட், கிராஸ், மேரிஜேன் என பல பெயர்கள் உண்டு. இதிலுள்ள டஸ்ட் ரக கஞ்சா, ரூ.50க்கு கிடைக்கும். பத்து கிராம் நடுத்தர தரம் கொண்ட கஞ்சா, ரூ.250க்கு விற்கப்படுகிறது. இங்கு கூறுவது டில்லி விலை நிலவரம் என்பதை மனதில் கொள்ளுங்கள். 

ஒருவரின் இருப்பிடத்தில் ஒரு கிலோ கஞ்சா பிடிபட்டால் அவருக்கு ஆறுமாத தண்டனை கொடுக்கப்படலாம். கஞ்சாவின் அளவு கூடுதலாக, சிறை தண்டனை  20 ஆண்டுகள் வரை செல்லும். அபராதம் 2 லட்சம் வரை அதிகரிக்கும். 

சராஸ், ஹஷிஷ்

கஞ்சா செடியிலிருந்து பெறப்படும் திரவத்தை சுத்தம் செய்து சராஸ் தயாரிக்கப்படுகிறது. டில்லியில் பத்துகிராம் சராஸ், ரூ. 1000க்கு விற்கப்படுகிறது. 

இதில் ஒருவரிடம் பெறப்படும் ஒரு கிலோ சராஸ் மூலம் ஆறு மாத சிறைதண்டனை கிடைக்கும்படி சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சராஸ் கிடைக்கும் அளவைப் பொறுத்து 

 பாங்

கஞ்சா இலைகள், விதைகளை பாலில் அரைத்து பாங் தயாரிக்கப்படுகிறது. டில்லியில் 150 ரூபாய்க்கு பாங் பானத்தை வாங்கி பருகமுடியும். இதில் ஆபத்தாக உட்பொருட்கள் இல்லை என்ற அரசு விதிகள் கருதுகின்றன. அரசு உரிமம் பெற்ற கடைகளில் பாங்கை வாங்கி பருகலாம். இதற்கு தண்டனைகள் ஏதும் கிடையாது. பல்வேறு மாநிலங்களில் பாங் பானத்தை பருகுவது பற்றி நிறைய சட்டங்கள் உள்ளன. 

மரிஜூவானா மீல்ஸ்

சீஸ், ப்ரௌனீஸ், பீட்ஸா சாஸ் ஆகியவற்றில் மரிஜூவானா குறிப்பிட்டளவு பயன்படுத்தப்படுகிறது. இதில் சாப்பிடுபவர்களுக்கு பெரிய பாதிப்பு ஏது்ம ஏற்படாது. மிக குறைவான அளவில் பயன்படுத்தப்படுவதால் இதனைக் கண்டுபிடிப்பது கடினம். 


இந்தியா டுடே

 

 


 

 

 

 

 

 

 

 

 




 

 

 

 

கருத்துகள்