ராமர் பாஜக என்ற ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானவர் கிடையாது! - பூபேஷ் பாதல், சத்தீஸ்கர் முதல்வர்
பூபேஷ் பாதல்
சத்தீஸ்கர் மாநில முதல்வர்
கோவிட் -19 வழக்குகள் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக சென்றுவிட்டது. இதை எப்படி சமாளிக்கப்போகிறீர்கள்
இந்த நிலைமை 21 நாட்களில் கொரானோவை சமாளித்து விடுவோம் என்று சவால் விட்டவர்களின் கன்னத்தில் விழுந்த அறை எனலாம். மகாபாரதம் 18 நாட்களில் எழுதப்பட்டதை இதற்கு உதாரணமாக சொன்னார்கள். இந்த விவகாரத்தில் தொடக்கம் முதலே சிக்கல் தொடங்கிவிட்டது. வெளிநாடுகளுக்கு மக்கள் சென்றுவருவதை முன்னமே நாம் தடுத்திருக்க வேண்டு்ம். இதனால்தான் நோய் அதிகமாக மக்களுக்கு பரவியது. சத்தீஸ்கரைப் பொறுத்தவரை குறைவான வழக்குகள்தான் பதிவாகியுள்ளன. பொதுமுடக்கம் முடிந்தபோது, மூன்று வழக்குகள்தான் நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்கள் இருந்தனர். ஆனால் எங்களைக் கேட்காமல் டஜனுக்கு மேலான ரயில்கள் ஓடத்தொடங்கின. நாங்கள் குஜராத்தில் இருந்து கேட்டது இரண்டு ரயில்களை மட்டும்தான். போக்குவரத்து தொடங்கியதும், அனைத்தும் எங்கள் கைகளைவிட்டு போய்விட்டது. வெளியிலிருந்து மாநிலத்திற்கு மக்கள் வரத்தொடங்கிவிட்டனர். அவர்களைக் கட்டுப்படுத்த மருத்துவர்களும், அரசு அதிகாரிகளும் வேலை செய்துகொண்டுதான் உள்ளனர். எங்களால் முடிந்த அத்தனையையும் நாங்கள் செய்துகொண்டுதான் உள்ளோம். அனைத்து போக்குவரத்துகளும் தொடங்கிவிட்ட நிலையில் அனைத்தும் கடினமாக மாறிவிட்டன.
உங்களது அரசு, ராம் வம் காமான் பாத் எனும் திட்டத்திற்கு 134 கோடி ரூபாயை செலவிட திட்டமிட்டுள்ளது. உங்களது காங்கிரஸ் கட்சியும் கூட பாஜகவின் பாதையை பின்பற்றத் தொடங்கிவிட்டதா?
ராமன் இந்திய கலாசாரத்தை சேர்ந்தவர். நாம் அவரது பெயரை வாழ்த்துக்காக பயன்படுத்தி வருகிறோம். இன்று சத்தீஸ்கரில் ராமாயணத்தை படிப்பவர்கள் அதிகரித்துள்ளனர். ஏழாவது நூற்றாண்டைச் சேர்ந்த கௌடில்யர் கோவில் இங்குதான் உள்ளது. மேலும் பல்வேறு தொன்மையான இடங்கள் மத்திய, மாநில அரசின் பாதுகாப்பில் உள்ளன. இந்த வகையில் நாங்கள் சுற்றுலாவைக் கூட மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். இன்று மத்தியில் உள்ள அரசு, இந்த கலாசாரத்தைச் சேர்ந்த ராமரை அவர்கள் உருவாக்கியதாக பிரபலப்படுத்தியதாக கூறி வருகின்றனர். போலித்தனமாக அவர்கள் ராமரின் பெயரை பயன்படுத்தி வருகின்றனர். ராமர் யாருக்கும் உரிமையானர் கிடையாது. அவர்மீது யாரும் காப்பிரைட் பதிவு செய்ய முடியாது.
கோவிட் 19 பிரச்னையை சமாளிக்கவே நிதி போதாத போது பிற திட்டங்களுக்கு எப்படி நிதி ஒதுக்குவீர்கள்?
பணம் பற்றாக்குறை என்பதற்காக மக்கள் நலத்திட்டங்களை நாம் தியாகம் செய்துவிட முடியாது. குறிப்பாக ஆரோக்கியத் திட்டங்களில். சமரசம் செய்ய முடியாது. மலேரியா பாதிக்கப்பட்ட பகுதியான பீஜப்பூரில் நாங்கள் ஊட்டச்சத்து சார்ந்தும் செயல்பட்டு வருகிறோம். தேவையான விஷயங்களுக்கு செலவழித்தால் பணம் பின்னர் வீணாகாது என்று நம்புகிறறோம். முந்தைய அரசு சாலைகளுக்கும், பஞ்சாயத்துகளுக்கும் செலவிட்டதைப் போலவே நாங்களும் செலவு செய்து வருகிறோம். நியாய் எனும் திட்டத்திற்கும் நிதி ஒதுக்கியுள்ளோம். மேலும் பணம் தேவைப்பட்டால் மாநில அரசு கடன் பெற்று செலவழிக்கும்.
பசுக்களுக்கான கோசாலை இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை. ஆனால் அதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்டுவிட்டன. நியாய் திட்டத்தில் இன்னும் பதிவு செய்யப்படாத ஆயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். உங்களது திட்டம் மேம்படுத்தப்பட வாய்ப்பு உள்ளதா?
அப்படி திட்டங்களுக்கு பதிவு செய்யாதபோது விவசாயிகளாக இருந்தாலும் அவர்களுக்கு பயன்கள் கிடைக்காது. அப்படி ஏன் பதிவு செய்யவில்லை என்றால் அவர்களின் விளைபொருட்களுக்கு வெளியில் அதிக விலை கிடைத்திருக்கலாம். அரசு சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்று வருகிறோம். கோசாலைகளை 2400 என்ற எண்ணிக்கையில் கட்டியுள்ளோம். விரைவில் அதனை நிறைவு செய்துவிடுவோம்.
சத்தீஸ்கரில் காங்கிரஸின் பலம் என்ன?
நான் சத்தீஸ்கரில் ஆறு ஆண்டுகள் கட்சி தலைவராக இருந்துள்ளேன். பிஎல் புனியா, திக்விஜய்சிங் ஆகியோரின் கீழ் பணியாற்றி உள்ளேன். என்னைப் பொறுத்தவரை அமைச்சர்களுக்கும் எனக்கும் அதிகவேறுபாடுகள் இருப்பதாக நினைக்கவில்லை. புனியா, திக்விஜய்சி்ங் ஆகியோர் எழுப்பிய கேள்விகள் தனிப்பட்டரீதியானவை என்று சொல்லலாம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக