சமூக வலைத்தளங்களின் சக்தியும், வருமானமும்! டேட்டா கார்னர்
சமூக வலைத்தளம்
டேட்டா கார்னர்.
இன்று சமூக வலைத்தளம்தான் புதிய புதுமையான செய்தி ஊடகமாக உள்ளது. இதில் வெறுப்பு அரசியல் முதற்கொண்டு நடைமுறையிலான புதிய செய்திகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனால் மக்களின் மனநிலை பற்றி அறிய சமூக வலைத்தளங்களை பார்த்தாலே போதும் என்று முடிவுக்கு வந்துவிடலாம். அதற்கேற்ப பல்வேறு நாடுகளில் நடைபெறும் முக்கியமாற பிரச்னைகளை சமூக வலைத்தளங்களில் அலசி பிழியப்படுகின்றன. இதைப்பற்றிய டேட்டாவை இப்போது பார்க்கலாம்.
உலகம் முழுவதும் செயலூக்கத்துடன் சமூக வலைத்தளத்தில் இயங்கும் மக்களின் எண்ணிக்கை 3.96 பில்லியன். உலக மக்கள்தொகையில் இது 46 சதவீதம்.
இந்தியாவில் 28 சதவீத மக்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகின்றனர். அவர்களின் எண்ணிக்கை 376. 1 மில்லியன்.
இந்தியர்கள் வாரத்திற்கு 17 மணிநேரங்களை சமூக வலைத்தளத்தில் செலவழிக்கிறார்கள். இது அமெரிக்கா, சீனா நாடுகளை விட அதிகம்.
2019ஆம் ஆண்டு சமூக வலைத்தளங்களில் செலவிடப்பட்ட டிஜிட்டல் விளம்பரங்களின் எண்ணிக்கை 28%. இதன் மதிப்பு ரூ.13,683 கோடி.
ஃபேஸ்புக்கின் 98 சதவீத வருமானம் விளம்பரங்கள் மூலம்தான் கிடைக்கிறது.
டிவிட்டரின் வருமானம் 87% விளம்பரங்களிலிருந்து கிடைக்கிறது. இதில் 13 சதவீதம் டேட்டா லைசென்ஸ் மூலம் கிடைக்கிறது.
ஃபேஸ்புக்கில் விளம்பரம் செய்த கட்சிகளைப் பற்றியும் அத்தொகை பற்றியும் பார்ப்போம்.
இத்தொகை பிப்ரவரி 8, 2019 - செப்டம்பர் 5, 2020
பாஜக ரூ. 4, 60, 18, 062
காங்கிரஸ் ரூ.2, 04, 46, 779
இந்தியன் பொலிட்டிகல் ஆக்சன் கமிட்டி ரூ.96, 87, 313
ஆம் ஆத்மி ரூ.68, 27, 223
திரிணாமூல் காங்கிரஸ் ரூ. 29, 87, 574
தேசியவாத காங்கிரஸ் ரூ. 8, 65, 147
இந்தியன் பொலிட்டிகல் ஆக்சன் கமிட்டி என்பது பிரசாந்த் கிஷோர் நடத்தி வரும் நிறுவனம் ஆகும்.
2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் விளம்பரம் செய்வதற்கு காங்கிரஸ் கட்சி அதிகம் செலவு செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சி, 9.4 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. பாஜக, 1.4 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளது.
பேஸ்புக் நிறுவனம் எப்படி சம்பாதிக்கிறது என அறிய பலருக்கு்ம ஆர்வம் இருக்கும். வாடிக்கையாளர்களுக்கு ஏற்றபடி விளம்பரங்களை வடிவமைத்து தருகிறது. விளம்பரங்களை மக்கள் கிளிக் செய்தால், பேஸ்புக்கிற்கு அவர்களது விளம்பரதாரர்கள் மூலம் பணம் கிடைக்கும். இவை இல்லாமல் வாட்ஸ்அப், இன்ஸடாகிராம் ஆகியவையும் பேஸ்புக்கிடம்தான் உள்ளன. வாட்ஸ்அப் மூலம் பெரியளவு வருமானம் வருகிறது என பேஸ்புக் கூறவில்லை. ஆனால் தனிப்பட்ட பயனர்களின் தகவல்களை சேகரித்து வருகிறது. அதனை வைத்து பின்னாளில் வருமானம் பார்க்கும் ஆர்வத்தில் பேஸ்புக் இருக்கிறது. இதிலே பணம் செலுத்தும் வசதி, பொருட்களை வாங்கும் வசதியும் விரைவில் இணைக்கப்படவிருக்கிறது.
இந்தியா டுடே
கருத்துகள்
கருத்துரையிடுக