பாம்புகளால் இரையை மென்று தின்ன முடியாது? ஏன் தெரியுமா?
பதில் சொல்லுங்க ப்ரோ?
வின்சென்ட் காபோ
பாம்புகள் தாம் பிடிக்கும் இரையின் சுவை உணரமுடியுமா?
நிச்சயமாக. அவற்றின் வாசனை அறியும் திறன் அதிகம். தனது நாக்கின் மூலம் பல்வேறு வாசனைகளை அறிந்துதான் இரையை வேட்டையாடுகிறது. நாக்கு மேலண்ணம் மூலம் கசப்பான சுவைகளை எளிதாக அறிய முடியும். இந்த தன்மை கூட அவை நச்சு நிரம்பிய உயிரினங்களை வேட்டையாடி உண்டுவிடக்கூடாது என்பதற்காக இயற்கை தந்த கொடை. மற்றபடி அதன் முக்கியமான பலம், வாசனையை அறிந்து இரையை வேட்டையாடுவது, தனக்கான இணையை அறிவது ஆகியவைதான்.
பாம்புகள் சாப்பிடும்போது எப்படி சுவாசிக்கின்றன?
பாம்புகள் உணவை மென்று சாப்பிடுவதில்லை. அப்படியே விழுங்கிவிடுகின்றன. இச்சூழ்நிலையில் அவை மூக்கு, அல்லது வாய் மூலம் சுவாசிக்கின்றன. இரையை முழுமையாக விழு்ங்குவது என்பது நெடுநேரம் நடக்கும் செயல்முறை. வாய்க்கும் நாக்குக்கும் இடையில் உள்ள கிளாட்டிஸ் என்ற அமைப்பு வாய் மூலம் சுவாசிக்கி நகர்ந்து கொடுக்கிறது.
பாம்புகளால் கடிக்க முடிந்தால் ஏன் இரையை மென்று தின்ன முடியாதுழ
அதன் வாய் அமைப்பு அப்படி அமைந்துள்ளது. முன்புறம் வளைந்த இரு பற்கள் இரையை கவ்வி பிடித்து நச்சை செலுத்த உதவுகின்றன. ஆனால் அவற்றை மென்று தின்ன முயன்றால் அதன் வாய்ப்பகுதியில் பல்வேறு காயங்கள் ஏற்படவே அதிக் வாய்ப்புள்ளது.
லாரி ஜாக்சன்
பிபிசி வைல்ட்லைப்
சீகல் பறவை நகரங்களில் வசிப்பது ஏன்?
நம்மைப் போல சம்பளம் என்ற காரணத்திற்காக அல்ல. நாம் சாப்பிடும் பீட்சா, கெபாப் சிக்கன், சாண்ட்விச் ஆகியவை பிடித்துள்ள காரணத்தால்தான். பொதுவாகவே சீகல் பறவை தீவுப்பகுகளிலும், கடற்கரையோர வீடுகளின் கூரைகளிலும் கூடு கட்டும். காரணம், அதன் முக்கிய எதிரி நரி. அவற்றிடமிருந்து குஞ்சுகளை பாதுகாக்க இப்படி செய்கின்றன. அதேசமயம் இவை புறாக்களையும் சமயம் கிடைக்கும் போது வேட்டையாடி தின்னும். மனிதர்கள் வீசும் குப்பைகளையும் ஆராய்ந்து பார்த்து உணவு தேடும் பழக்கமும் உண்டு. ஆனால் வேட்டையாடி உண்ணுவதில் ஆர்வம் கொண்ட பறவைகள் என்பதால் பனிக்காலத்தில் இங்கிலாந்து, போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு விசிட் அடித்து, நமது உணவை திருடித் தின்று பசியாறுகின்றன.
எட் ட்ரெவுட்
கருத்துகள்
கருத்துரையிடுக