அம்மா விட்டுச்சென்ற தடயங்களை தேடி புறப்படும் மகளின் கதை! - எனோலா ஹோம்ஸ் 2020

 

 

Enola Holmes Teaser with Brown, Claflin and Cavill ...

 

 


எனோலா ஹோம்ஸ்

Screenplay byJack Thorne
Based onThe Enola Holmes Mysteries: The Case of the Missing Marquess
by Nancy Springer

Directed byHarry Bradbeer

 

Music byDaniel Pemberton
CinematographyGiles Nuttgens

 

எனோலா, ஷெர்லாக் ஹோம்ஸின் தங்கை. எனோலாவின் தாய், அவரை பள்ளிக்கு அனுப்பாமலேயே அனைத்து பாடங்களையும் வீட்டிலேயே கற்பிக்கிறார். இதனால் எனோலாவுக்கு சண்டைப்பயிற்சி, கணிதம், அறிவியல், வேதியியல் என அனைத்துமே அத்துபடியாகிறது. ஒருநாள் திடீரென காலையில் எனோலாவின் அம்மாவைக் காணவில்லை. அவரை எப்படி எனோலா கண்டுபிடிக்கிறார் என்பதுதான் கதை.


படம் முழுக்க எனோலா, தான் தாய் சொல்லித்தந்த விஷயங்கள் வழி எப்படி செயல்பட்டு தாயை தேடிப்போகிறார். வாழ்க்கையில் முதல் காதலை எப்படி பெறுகிறார் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார்கள். எனோலாவின் கதையை அவரே கேமராவைப் பார்த்து அடிக்கடி சொல்லுவது படத்தின் புதுமைகளில் ஒன்று.


ஷெர்லாக் ஹோம்சை பார்த்து பழகியவர்களுக்கு ஹென்றிக் கோவில் எப்படி செட் ஆவார் என்பது சந்தேகம்தான். படம் அவரைப்பற்றியல்ல என்பதால். அதைப்பற்றி நாம் கவலையும் படவேண்டியதில்லை.


படம் முழுக்க பெண்களுக்கான உரிமை, சமூக சீர்திருத்தம், அதற்கான புரட்சி நடவடிக்கைகள், மசோதாவை தேர்ந்தெடுக்கும் பிரபு குடும்பத்தினரை கொல்ல முயற்சி என பல்வேறு வழிகளில் செல்கிறது.

Netflix Reveals First Look at Enola Holmes Featuring ...


பெண்கள் குறிப்பிட்ட வயதில் சுயமாக எப்படி முடிவெடுக்கவேண்டும் என்பதை துணிச்சலான வசனங்களிலும் செயலிலும் காட்டியிருக்கிறார்கள். படம் எனோலாவுக்கானது என்பதால், அவர்தான் படத்தின் முக்கியமான சிறப்பு அம்சமும் கூட. தாயைக் கண்டுபிடிக்கும் துப்புகளை கண்டறிவது, மனதிற்கு பிடித்த முதல் காதலைக் கண்டடைவது, பள்ளிக்கு அனுப்பப்படும்போது வெடித்து அழுவது, அம்மாவைப் பற்றிய எதிர்மறை செய்திகளை கேள்விப்படும்போது அவர் யார் என மனதிற்குள் மருகுவது என நடிப்பில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.


புதிர்ப்பாதை


கோமாளிமேடை டீம்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்