இந்தியா டுடே 2020! சக்திவாய்ந்த மனிதர்களின் பட்டியலில் இடம்பெற்ற சிலர்....
சக்தி வாய்ந்த மனிதர்கள்
கிரண் மஜூம்தார் ஷா 67
பயோகான்
சுயமாக உருவாகிய வணிகப்பெண்மணி. இவரது நிறுவனத்தின் சொத்து மதிப்பு 34, 310 கோடி மஜூம்தார் ஷா மெடிக்கல் சென்டர் மூலம் குறைந்த விலையில் புற்றுநோய்க்கான சிகிச்சைகளை வழங்கிவருகிறார். ஆசியாவிலேயே இன்சுலின் தயாரிப்பில் முன்னணி வகிப்பது பயோகான்தான். மலேசியாவில் உள்ள உள்ள தொழிற்சாலையில் இதுவரை 300 கோடி மருந்துகள் விற்றுள்ளன. பெங்களூருவில் பயோகான் தலைமையகம் உள்ளது. மறைந்த இவரது தந்தை சாம்பல் இங்குதான் தூவப்பட்டுள்ளது.
சசிதரன் ஜகதீஷன்
55
ஹெச்டிஎப்சி வங்கி இயக்குநர், தலைவர்
இந்தியாவில் தனியார் வங்கிகளில் இன்று பெரிய வங்கியாக ஹெச்டிஎப்சி தலைநிமிர்ந்து நிற்கிறது. அதற்கு முக்கியக்காரணம், அன்னார்தான். 1996ஆம்ஆ ண்டு நிதி இயக்குநராக பணிக்கு சேர்ந்தார். 2008இல் வங்கியின் தலைவர் இயக்குநராக பதவியேற்றார். ஆதித்யா பூரி , நிறுவன இயக்குநராக26 ஆண்டுகளுக்குப் பணிபுரிந்தபிறகு, இவரையே தலைவராக தேர்ந்தெடுத்துள்ளார்.
இன்று முதலீட்டாளர்களின் சொர்க்கமாக ஹெச்டிஎப்சியே உள்ளது. மொத்த பொதுத்துறை வங்கிகளின் மதிப்பு இந்த தனியார் வங்கியின் மதிப்பில் பாதிதான் வரும்.
செப்.2020இல் ஹெச்டிஎப்சி வங்கி இந்தியாவின் நெ.1 வங்கியாக ஏழாவது ஆண்டாக பிராண்ட் இசட் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதன் வணிக மதிப்பு இன்று 1.48 லட்சம் கோடியாக உள்ளது.
யார் சாப்பிடுவார் என்று தெரியாவிட்டாலும் பரிசோதனை முறையில் சமைக்கும் திறன் பெற்றவர் ஜகதீஷன். தயிர்சாதம்தான் பிடித்த உணவு. கர்நாடக இசைப்பாடல்களை கேட்பதும். சைக்கிளிங் செய்வதும் பிடித்தவை.
ஹரிஷ் சால்வே
65
இந்தியாவில் நடக்கும் பெரிய பணக்காரர்கள் தொடுக்கும் வழக்குகளுக்கு ஹரிஷ்தான் முதல் சாய்ஸ். அனில் அம்பானியின் திவால் வழக்கு, ச ச்சின் பைலட் மீது தொடுத்த தகுதியிழப்பு வழக்கு, பேஸ்புக் இந்தியா தலைவர் அஜித் மோகன் மீதான வழக்கு, கஞ்சன் சக்சேனா படத்திற்கு எதிராக அரசு தொடுத்த வழக்கு ஆகியவற்றை கையாண்ட பெருமைக்குரியவர்.
பெரும்பாலும் கையாளும் வழக்குகளில் வெற்றியைச் சந்தித்தவர் இவர். இந்தியா பாக் பிரிவினையின்போது இங்கிலாந்தில் டெபாசிட் செய்யப்பட்ட 306 கோடி ரூபாய் யாருக்கு சொந்தம் என்று வாதிட்டு இந்தியாவுக்கு வெற்றி பெற்றுதந்தவர். லண்டனில் ரேஞ்ச் ரோவர் காரில் சுற்றி வருகிறார். பணக்கார ர்களுக்கு மட்டுமல்ல அண்மையில் உச்சநீதிமன்றத்தில் வாதிட வழியில்லாத ஏழை பெண் ஒருவருக்கும் வாதிட்டு வழக்கில் வென்றுகொடுத்த நல்லிதயக்காரர்.
ராஜீவ் பஜாஜ்
53
பஜாஜ் நிறுவனத்தின் நடப்பு கால தலைவர் இயக்குநர். மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை துணிச்சலாக எதிர்க்கும் ஒரே தொழிலதிபர் ராஜீவ் பஜாஜ்தான். 70 நாடுகளில் பஜாஜ் தயாரிப்புகள் விற்பனையாகின்றன. மூன்று சக்கர வாகன தயாரிப்பிலும் முன்னணியில் உள்ளது. நடப்பு ஆண்டில் வாகனங்களை விற்று 31, 652 கோடி ரூபாய். கொரோனாவுக்கு ஹோமியோபதி மருத்துவமுறையில் மருந்து உண்டு என ஆராய்ச்சி செய்து வருகிறார். கம்போரா 1எம் என்ற மருந்தை பிறருக்கு பரிந்துரைக்கிறார்.
கருத்துகள்
கருத்துரையிடுக