சிறுமூளை கொண்டவர்கள்தான் வரலாற்றை திருத்தி எழுத முயல்கிறார்கள்! - உ.பி. மகாராஷ்ர பாடநூல்கள் மாற்றம்
பாடத்திட்டங்களை மாற்றினால் உலகம் மாறிவிடுமா?
நவீன கால இந்தியாவில் ஆட்சியாளர்கள் தம்மை சர்வாதிகாரிகளாக மாற்றிக்கொண்டு வருகிறார்கள். தாங்கள் மனதில் நினைப்பதை பிறருக்கும், எதிர்கால தலைமுறையினருக்கும் வரலாறாக்க நினைக்கிறார்கள். இதன் பொருட்டுதான் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் பற்றி பாடங்கள் பாடநூல்களிலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் எதிர்கால மாணவர்களுக்கு பல்வேறு வரலாற்று தகவல்கள் மறைக்கப்படுகின்றன. அவர்கள் தொன்மை இந்தியாவில் என்ன நடந்தது என்று கூட தெரியாமலே படித்து பட்டம் பெறும் ஆபத்து உள்ளது. அரசியல்வாதிகள் தங்களை பிரபலப்படுத்தி, பிரமாண்டப்படுத்திக் காட்டுவதற்காக இதுபோன்ற பாடங்களை நீக்கி, வரலாற்றைத் தூய்மைப்படுத்தும் வேலைகளை செய்கிறார்கள். கடந்த மாதம் மகாராஷ்டிரா அரசு கல்வித்துறை, வரலாற்று நூல்களிலிருந்து இஸ்லாமிய மன்னர்களைப் பற்றிய செய்தியை நீக்கிவிட்டது. உத்தரப்பிரதேச அரசு இதே விஷயத்தை இப்போது செய்துவருகிறது. இப்படி இஸ்லாமிய மன்னர்களைப் பற்றி நீக்குவதால், இஸ்லாமியர்களுக்க் எந்த இகழ்ச்சியும் கிடையாது. வரலாற்றைப் படிப்பவர்களுக்குதான் பாதிப்பு,
பாஜகவைச் சேர்ந்த சங்கீத் சோம் என்பவர், தங்களது கட்சியின் நோக்கம் பற்றி தெளிவாகவே பேசிவிட்டார். தாஜ்மஹால் என்ற கட்டிடத்தில் என்ன உள்ளது. தனது தந்தையை கைது செய்து சிறைவைக்கவே அதனை ஷாஜகான் உருவாக்கினார். இந்துகளை அவர்கள் தீண்டாமையுடன் தள்ளி வைத்தனர். இனி வரலாற்று நூல்களில் மட்டுமல்ல நமது நினைவில் இருந்தும் கூட அக்பர் பாபர், அவுரங்கசீப் ஆகியோர் இருக்க கூடாது என்று பேசியுள்ளார்.
உலகில் எந்த அரசும் கொடூர மன்னர்கள், ஆட்சியாளர்களைப் பற்றி மக்களின் நினைவிலிருந்து அகற்றும் வேலையை செய்யவில்லை. இவான், ஹிட்லர், ஸ்டாலின், இடிஅமீன் பற்றியெல்லாம் நாம் இன்றும் படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். நாளையும் படிப்போம். கொலைகளை செய்த போப் 12 பற்றிக்கூட வரலாற்று நூலில் உள்ளது. அவர் செய்த குற்றங்களைப்பற்றிய பட்டியலுடன் இடம்பெற்றுள்ளார். அனைவருக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு, அக்பர், அசோகர் ஆகியோர் இஸ்லாமிய ஆட்சியாளர்களில் பெரும்புகழ் பெற்றவர்கள். அசோகர், கலிங்கப்போரில் நடந்த உயிர்ப்பலிகளுக்காக பின்னாளில் பசுக்களை பலியிடுவதைக் கூட தடுத்து சட்டம் இயற்றினார். அவர் மணந்த இந்து மத மனைவிகளை மதம் மாறக்கூறவில்லை. மகாபாரதத்தை பெர்சிய மொழியில் மொழிபெயர்ப்பு செய்ய உதவினார்.
இன்று இஸ்லாமிய ஆட்சியாளர்களே நூலில் இருக்க கூடாது. அவர்கள் பெயர், தெருக்களில் நகரங்களில் இருக்ககூடாது என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆசைப்படுகிறார். ஆட்சியாளர்களாக அசோகர், அக்பர் பெற்ற பெருமைகளை துறவியாக இருந்து ஆட்சி செய்யும் யோகி ஆதித்யநாத் என்றுமே பெறமுடியாது என்பதற்கு இந்த சகிப்பற்ற தன்மையே முக்கியக் காரணம்.
ஈரானில் பாதிக்கு பாதி என ஆண்கள், பெண்கள் அனைத்து துறைகளிலும் பணிபுரிந்து வருகிறார்கள். ஆனால் இப்போது அறிவியல் போன்ற துறைகளில் பெண்கள் இருக்ககூடாது என அவர்களை பாடநூல்களிலிருந்து நீக்கும் முயற்சி தொடங்கியுள்ளது. மதம் அங்கு பாடத்திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு கவிஞர் உமர்கயாம் பெயர் நீக்கப்பட்டு அதில், பல்வேறு போர்களில் பங்குபெற்று உயிர்விட்ட வீர ர்களைப் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் ஈரான் ஆட்சியாளர்கள் பெயர் அசோகர், அக்பர் போல் உயரத்திற்கு வந்துவிடுமா? இதுபோன்ற சிறுபிள்ளைத்தனங்களால் வரலாற்றை யாரும் மாற்ற முடியாது. இந்த செயல்பாடுகள் ஆட்சியாளர்களின் சிறிய மூளையைத் தான் அடையாளம் காட்டுகிறது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
டிஜேஎஸ் ஜார்ஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக