உங்கள் போனுக்கான சிறந்த போட்டோ எடிட்டிங் ஆப்ஸ்கள் இதோ......2020
சிறந்த போட்டோ எடிட்டிங் ஆப்ஸ்
ஸ்னாப்சீட்
ஆண்ட்ராய்டுக்கான சிறந்த போட்டோ எடிட்டிங் ஆப் இது. போட்டோ எப்படி எடுத்தாலும் இதில் உள்ள ஏராளமான டூல்களை பயன்படுத்தி ரவிவர்மாக ஓவியம் போல அழகாக மாற்றமுடியும். புகைப்படத்தை தவறுதலாக அழித்துவிட்டாலும் கூட அதனைத் திரும்ப பெற முடியும். கூகுளின் தயாரிப்பு என்பதால் தயங்காமல் பயன்படுத்தலாம். ஆப்பை திறந்தவுடனே பிரிவியூ பேனல் அழகாக விரிகிறது. செய்யும் மாறுதல்களை உடனுக்குடன் பார்த்துக் கொள்ளலாம்.
விஸ்கோ
இந்த ஆப் தனித்திறமையான புகைப்படக்காரர்களுக்கானது. இதன் சிறப்பம்சம், ரெசிப்பீஸ் என்ற அம்சம். எதிர்காலத்தில் புகைப்படத்தில் ஏற்படுத்தப்போகும் மாற்றங்களுக்காக அதனை சேமித்து வைக்க முடியும். இலவச ஆப்பில் குறைந்த சமாச்சாரங்களைத்தான் சோதிக்க முடியும். புகைப்பட எடிட்டிங் ஆப் என்றாலும், இதனை சமூக வலைத்தளம் போல பயன்படுத்தால். இந்த ஆப்பை பயன்படுத்துபவர்களின் படங்களைப் பார்க்கலாம். நண்பர்களுக்கு நீங்கள் செய்த படங்களை பகிரலாம்.
இதில் உடனே மாஸ்டர் ஆக முடியாது. அதிக நேரம் செலவழித்தால்தான் சாத்தியம் என்பதை உணர்ந்து பயன்படுத்துங்கள். நிறைய ஆப்சன்களைப் பயன்படுத்த காசு கட்டி உறுப்பினராவது அவசியம்.
கூகுள் போட்டோஸ்
இது அடிப்படையில் புகைப்படங்களை பார்க்க உதவும் ஆப்தான். புகைப்படங்களை இடது, வலது என மாறுதல்களை செய்வது போன்ற எளிய விஷயங்களை மட்டும்தான் இதில் செய்யமுடியும். படங்களை கூகுள் ட்ரைவில் இணைக்கமுடியும். எளிமையாக இருப்பதால், எளிதாக பயன்படுத்தலாம். கிராப், வெட்டுவது, ஒட்டுவது, ஒளி அமைப்பு ஆகியவற்றை எளிதாக செய்யலாம்.
வெப் யூசர்
கருத்துகள்
கருத்துரையிடுக