டாப் 5 ஸ்டார்ட் அப்கள்- மத்திய கிழக்கு நாடுகளில் அதிக முதலீடு பெற்ற ஸ்டார்ட்அப்கள் இவை!
டாப் 5 ஸ்டார்ட்அப்கள்
ப்யூர் ஹார்வெஸ்ட் ஸ்மார்ட் ஃபார்ம்ஸ்
நிறுவனர்
மஹ்மூத் அதி, ராபர்ட் குப்ஸ்டாஸ், ஸ்கை கர்ட்ஸ்
பெற்ற முதலீடு 135.8 மில்லியன்
தலைமையகம் அரபு அமீரகம்
தொடக்கம் 2016
பசுமை இல்ல வாயுக்கள் பிரச்னையில்லாத காய்கறிகள், பழங்களை இந்த நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இருபதிற்கும் மேலான வகைகளில் தக்காளி, ஆறு வித ஸ்ட்ராபெரி பழங்களை உற்பத்தி செய்து வருகிறது. ராபர்ட், ஸ்கை ஆகியோர் ஸ்டான்போர்டு மாணவர்கள். 2016ஆம் ஆண்டு இவர்களுடன் மஹ்மூத் அதி இணைந்தார். அபிதாபியில் 2018ஆம் ஆண்டு ஹைடெக் பசுமை இல்லம் ஒன்றை கட்டினர். தற்போது 110 மில்லியன் டாலர்கள் நிதியுதவி கிடைக்க குவைத்திலும் தங்களது நிறுவனத்தை விரிவாக்கம் செய்யவுள்ளனர்.
ஸ்வெல்
நிறுவனர்
முஸ்தபா கண்டில், அஹ்மத் சபா
முதலீடு 92 மில்லியன் டாலர்கள்
தலைமையகம் அரபு அமீரகம்
தொடக்கம் 2017
ஸ்வெல் என்பது போக்குவரத்து சேவை நிறுவனம். கெய்ரோ, அலெக்ஸாண்ட்ரியா ஆகிய தடங்களில் 600க்கும் மேற்பட்ட போக்குவரத்து சேவைகளை இயக்கி வருகிறது. தற்போது கென்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலும் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
பிற நிறுவனங்களை விட ஸ்வெல் ஆப்பில் சேவைக்கட்டணம் 70 சதவீதம் குறைவு. 2019இல் 42 மில்லியன் டாலர்கள் முதலீட்டைப் பெற்று பாதுகாப்பாக உள்ளது. போக்குவரத்து வசதி இல்லாத குறைந்த இடங்களில் தங்களது சேவையை ஸ்வெல் நிறுவனம் உருவாக்க உள்ளது.
கிடோபி
நிறுவனர்
ஆண்ட்ரெஸ் அரீனெஸ, பாடெர் அடாயா, மொகமது பாலட், சாமன் தர்கன்
முதலீடு 89 மில்லியன் டாலர்கள்
தலைமையகம் அரபு அமீரகம்
தொடக்கம் 2018
அமெரிக்கா, அரபு அமீரகம், சவுதி அரேபியா என பல்வேறு நாடுகளில் உணவகங்களை கிடோபி நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் ஆப்பரேஷன் ஃபடாஃபெல், பீட்ஷா எக்ஸ்பிரஸ், ரைட் பைட் ஆகிய நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகப் பெற்றுள்ளது. 60 மில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீட்டைப் பெற்றுள்ளதால், அமெரிக்காவில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் சமையலறைகளை அமைக்க உள்ளது. இதோடு சேர்த்து உலகம் முழுவதும் நூறு இடங்களில் சமையலறைகளை அமைக்கவிருக்கிறது.
செல்எனிகார். காம்
நிறுவனர் சேஜின் யால்சின்
முதலீடு 50 மில்லியன்
தலைமையகம் அரபு அமீரகம்.
தொடக்கம் 2013
பயன்படுத்திய கார்களை விற்பதற்கான ஆன்லைன் விற்பனைத்தளம் இது. 2020இல் 35 மில்லியன் டாலர்களை முதலீடாக பெற்று 50 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளது. சவுதி அரேபியாவில் நூறு கிளைகளை தொடங்க திட்டமிட்டுள்ளது. இதில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த பணியாளர்கள் 300க்கு வேலை அளிக்க உள்ளார் யால்சின். இவர் இதற்கு முன்னர் ஆன்லைன் பொருட்கள் விற்பனைத்தளம் சுகார்.காம் என்பதை தொடங்கினார். பின்னர் அதனை அமேஸானின் சூக்.காம் என்ற தளத்திற்கு விற்றுவிட்டார்.
டிராவீஸி குழுமம்
நிறுவனர்
கீத் பல்லா, மொகமத் பின் மஹ்ஃபூஸ், திக்விஜய் பிரதாப்
முதலீடு 40 மில்லியன்
தலைமையகம் அரபு அமீரகம்
தொடக்கம் 2013
முஸ்லீம்களுக்கான நட்புறவு கொண்ட பயண நிறுவனம். இந்தியா, அரபு அமீரகம், சவுதி அரேபியா, எகிப்து ஆகிய நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. ஹஜ் பயணத்திற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள பயண நிறுவனங்களில் இந்த நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனம் மூலம் உலகெங்கும் இருந்து 20 லட்சத்திற்கும் மேலான பயணிகள் பயணித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்துரையிடுக