இளம்பெண் கொல்லப்பட்டது சாதிரீதியான கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சிதான்! பிரசாந்த் குமார், ஏடிஜிபி, உ.பி

 

 

 

 

 

 

Ananda Vikatan - 14 October 2020 - கார்ட்டூன் | Cartoon ...

 

 

வல்லுறவு நடக்கவில்லை!
பிரசாந்த் குமார்.
ஏடிஜிபி, உத்தரப்பிரதேசம்

பாதிக்கப்பட்டவர்களின் வீட்டிற்கு எதற்கு இந்தளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன?

செப்.14க்குப் பிறகு உளவுத்துறை தகவல்படி, சாதி மோதல்கள் நடைபெறுவதற்கான முயற்சிகள் நடைபெறவிருக்கின்றன என்ற தகவல் கிடைத்தது. எனவே அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு வரும் மிரட்டல்களைத் தடுக்கவும், பாதுகாப்பு அளிக்கவும் காவல்துறையை பயன்படுத்தினோம். நாங்கள் பாதுகாப்பு வழங்காதபோது, பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தாலும் காவல்துறைதான் பொறுப்பு என்பார்கள். உள்ளூர் காவல்துறை, பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பது கடமைதான்.

இறந்துபோன பெண்ணுக்கு பாலியல் வல்லுறவு நடந்திருக்கும் என்கிறீர்களா?

இன்னும் வழக்கு பற்றிய முறையான விஷயங்களை பதிவு செய்யவில்லை.

சிபிஐ விசாரணை எதற்கு?

வழக்கு வெளிப்படையாக நடக்கவேண்டும் என்பதற்காகத்தான். இதன் காரணமாக மாநில காவல்துறை, சிபிஐயோடு இணைந்து செயல்படவிருக்கிறது.

சாதி மோதல்களை ஏற்படுத்த முனைந்த குழுவைக் கண்டுபிடித்துவிட்டீர்களா?

இந்த சதியை கண்டுபிடிக்க நாங்கள் விசாரணை செய்து வருகிறோம். சாதிக்குழுக்கள், தனிநபர்கள் என சமூக அமைதியைக் குலைத்துவருபவர்களை விரைவில் நாங்கள் கைது செய்வோம்.

சாதிரீதியான வன்முறை நடக்கும் என்று ஏன் நினைக்கிறீர்கள்?

உத்தரப்பிரதேசத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளாகவே சட்ட ஒழுங்கு பிரச்சனையே இல்லை. எனவேதான். சாதி சார்ந்த சில  குழுக்கள் சமூக அமைதியைக் குலைக்க இதுபோன்ற நிகழ்ச்சிகளை திட்டமிடுகிறார்கள்.

இறந்த பெண்ணின் உடலை காவல்துறை அவசரமாக எரிக்க காரணம் என்ன?

உள்ளூர் நிர்வாகம் எடுத்த முடிவுதான் அதற்கு காரணம். மாவட்ட நீதிபதி, எஸ்.பி ஆகியோர் அங்குள்ள நிலைமையை உத்தேசித்து இந்த முடிவை எடுத்தனர். இறுதிச்சடங்கு உறவினர்கள் சூழ நடைபெற்றது.

நம்ரதா பிஜி அஹூஜா

 

கருத்துகள்