இந்திய அரசு தொடர்ச்சியாக எங்களை முடக்குவதற்கான செயல்களை செய்து வருகிறது! -டேவிட் கிரிப்பின்ஸ், ஆம்னெஸ்டி
டேவிட் கிரிப்பின்ஸ்
ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல்
அமலாக்கத்துறை சில ஆண்டுகளாக உங்கள் அமைப்பை குறிவைத்து தாக்குவதாக நினைக்கிறீர்களா?
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அரசு எங்கள் வங்கிக்கணக்கை முடக்குவது, செயல்பாடுகளை தடுப்பது என தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். வங்கிக்கணக்கு முடக்கப்பட்டு விட்டதை வங்கிதான் எங்களுக்கு கூறியது. அமலாக்கத்துறையின் செயல்பாடு இதில் இருக்கிறதா என்று தெரியவில்லை.
அரசு, நீங்கள் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறுகிறதே?
எங்கள் போர்டு உறுப்பினர்களை விசாரிப்பது, ஆதாரங்கள் இல்லாமல் ஏராளமான வழக்குகளை பதிவது என பல்வேறு விதிமீறல்களை இந்திய அரசு எங்களுக்கு செய்தது. முதல் தகவல் அறிக்கை பதிவானாலும் கூட இன்னும் வழக்குகள் என்னென்ன என்று எங்களுக்கு கூறப்படவில்லை. கடந்த செப்டம்பரில் அரசின் நடவடிக்கைகள் எங்களுக்கு எதிராக தீவிரமாக இருந்தன.
முந்தைய அரசும் கூடத்தான் உங்கள் மீது வெளிநாட்டு நிதி பெறுவது தொடர்பான விவகாரத்தில் தடை விதித்தது.
எங்களுடைய மாடல் மூலம் வெளிநாட்டில் பணம் பெறும் தேவை இல்லை. முந்தைய அரசை விட இந்த அரசு எங்கள் செயல்பாடு மீது தீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. சுதந்திரமாக செயல்படும் இயக்கங்கள், அமைப்புகள், தனிநபர்களை அரசு முடக்க நினைக்கிறது. அவர்களின் குரல்வளையை அதிகாரத்தின் மூலம் நெறிக்கிறது.
உங்கள் அமைப்புக்கு உலகளாவிய ஆம்னெஸ்டி அமைப்பு நிதியுதவி செய்கிறதா?
இந்திய செயல்பாடுகளுக்கு நாங்களே நிதி திரட்டி கொள்கிறோம். எங்கள் அமைப்புக்கு இந்தியாவில் 11 ஆயிரம் தன்னார்வலர்கள் உள்ளனர். அவர்கள் மூலம் எங்களுக்கு நிதி கிடைக்கிறது.
சட்டம் 370, டில்லி கலவரம் ஆகியவற்றை பற்றி தீவிரமாக அறிக்கை தயாரித்தது உங்கள் அமைப்புதான் அல்லவா?
காஷ்மீர், டில்லியில் நிறைய மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன. டில்லியில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல், பொதுச்சொத்துகளை சேதப்படுத்துவது ஆகியவற்றுக்கு காவல்துறை துணையாக நின்றது. பெரிய ஜனநாயக நாடு என்று கூறிக்கொள்ளும் இந்தியாவில் ஏராளமான குடிமை அமைப்புகள், தன்னார்வ அமைப்புகளின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன. இதன் மூலம் உலகிற்கு இந்தியா சொல்லும் செய்தி உவப்பானதில்லை.
அடுத்து என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?
நாங்கள் அரசின் முடிவை எதிர்த்து சட்டரீதியாக போராடப் போகிறோம். அரசு எங்களைப் பற்றி கூறிய தவறான விஷயங்களுக்கு எதிராக நிற்போம்
தி வீக்
நம்ரதா பிஜி அஜூஜா
கருத்துகள்
கருத்துரையிடுக