அமேஸானின் இன்டோர் ட்ரோன் பாதிப்பு ஏற்படுத்துகிறதா?
அமேசானின் இன்டோர் ட்ரோன்
அமேசான் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள இன்டோர் ட்ரோன், பாதுகாப்பு பிரச்னை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக டெக் வல்லுநர்கள் கூறியுள்ளனர். தி ரிங் ஆல்வேய்ஸ் ஹோம் கேம் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது.
ஹேக்கர்கள், இச்சாதனத்தை எளிதாக பயன்படுத்தி வீட்டில் இருக்கும் பொருட்களை பார்த்து கொள்ளையடிக்க முடியும். அமேசான் நிறுவனம் இச்சாதனத்தை வீட்டை கண்காணிக்கும் அற்புதமான சாதனம் என்று விளம்பரம் செய்கிறது. ஆனால் காஸ்பர்ஸ்கை நிறுவனம், இது புதிய சைபர் பிரச்னைகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது என எச்சரித்துள்ளது. ரிங் மட்டுமல்ல இணையத்தோடு இணைந்து செயல்படும் அனைத்து சாதனங்களும் பிறரால் இயக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பதே உண்மை. இச்சாதனம் வீட்டுக்குள் பறந்து கண்காணிப்பது என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது இனிமேல் பயனர்கள் கூறும் விஷயங்களில்தான் இருக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக