ஆற்றில் பயணிகளை முதுகில் சுமக்கும் யமராஜா! உத்தர்காண்ட்டில் புதுமை மனிதர்!

 

 

 

 

Fishermen, Boat, Asia, Indonesian, Traditional, River
sample picture cc

 

 

 

யமராஜா


உத்தர்காண்ட் மாநிலத்திலுள்ள திவானி ராமுக்கு ஐம்பது வயதாகிறது. அவர் பங்காபானி பகுதியில் வசிக்கிறார். பருவகாலங்களில் மக்கள் ஆற்றைக் கடக்க முப்பது ஆண்டுகளாக உதவிவருகிறார். ஊர் மக்கள் அவரை யமராஜா என்று அழைக்கின்றனர். சிலசமயம் இந்த வேலைக்கு எருமையில் ஏறி வருவதால் இந்த பெயர் அவருக்கு சூட்டப்பட்டுள்ளது. ஆற்றைக்கடக்க நினைப்பவர்களை முதுகில் தூக்கிக்கொண்டு நடக்கும் துணிச்சல்காரர் இவர். ஆற்றில் ஒருவரைத் தூக்கிக்கொண்டு நடப்பது என்பது சாதாரண பணியல்ல. வழுக்கும் பாறைகள், நீரின் கணிக்கமுடியாத வேகம் என நிறைய பிரச்னைகள் உள்ளன.


பதினான்கு வயதில் ராமுவுக்கு அவரது தந்தை ஆற்றில் நடக்க சொல்லித் தந்திருக்கிறார். பல்வேறு பருவகாலங்களில் தனது பணியை நிறுத்தாமல் செய்துவருபவருக்கு, இப்போது அவரின் மகனும் துணையாக இருக்கிறார்.


தனது சேவைக்கு குறிப்பிட்ட கட்டணம் தாண்டி அதிக பணத்தை எப்போதுமே ராம் நாடியதில்லை. பல்வேறு தொழிலாளர்கள், அதிகாரிகள், சுற்றுலா பயணிகள் ஆகியோருக்கு இலவசமாகவே ஆற்றைக் கடக்க உதவுகிறார். தற்போது ஆற்றைக் கடக்க அரசு இப்போது பாலம் கட்டிவருகிறது. எதிர்காலத்தில் இவருடைய உதவி மக்களுக்கு தேவைப்படாமல் போக வாய்ப்புள்ளது. ஆனால் இந்த உதவிகளை செய்தே கிராம தலைவராக(2015-2019) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.



கருத்துகள்