டிக்டாக்கிற்கு மாற்றாக பிரபலமாகி வரும் ட்ரில்லர் !

 

 

 

 

 

What is Triller? The app that is seen as a TikTok replacement

 

Triller - Music Video Network - Android Apps on Google Play


டிக்டாக்கிற்கு மாற்றாக ட்ரில்லர்!


அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் தடைக்கும் பிறகு உலகம் முழுக்க வேகமாக பரவும் அதேபோன்ற ஆப்தான் ட்ரில்லர். இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூட இணைந்துள்ளார். இந்த ஆப்பும் டிக்டாக் போலவேதான். இதில் இணைபவர்கள் தங்களுக்கு பிடித்த பாடலைப் போட்டு டான்ஸ் ஆடி பகிரவேண்டியதுதான். இதில் தங்களுக்குப் பிடித்தவர்கள் ரசித்து லைக் போட்டு பின்தொடர்பவர்கள் அப்படியே தொடரலாம்.


2015ஆம் ஆண்டு ட்ரில்லர் ஆப் உருவாக்கப்பட்டுவிட்டது. ஆனால் பிரபலமானது, டிக்டாக் தடைக்கும் பிறகான ஓராண்டில்தான். டிக்டாக் பயனர்கள் எல்லாருமே அப்படியே ஸ்பேர் பஸ்சுக்கு மாறுவது போல இந்த ஆப்புக்கு தாவி ஏறிவிட்டார்கள். இன்றுவரை உலகம் முழுக்க 120 மில்லியன்(1மில்லியன்- பத்து லட்சம்) பேர் இதனை தரவிறக்கம் செய்திருக்கிறார்கள். 27 மில்லியன் மக்கள் இந்த ஆப்பை தினசரி பயன்படுத்துகிறார்கள். டிக்டாக்கில் புகழ்பெற்ற பிரபலங்களான ஜோஸ் ரிச்சர்ட்ஸ், சார்லி டிஅமெல்லோ, ஜஸ்டின் பைபர், டைனமோ, ரீடா ஓரா ஆகியோர் பிற பயனர்ளள் ட்ரில்லரைப் பயன்படுத்த தூண்டுகிறார்கள்.


அப்படி என்ன அம்சம் இதில் ஈர்க்கிறது? நீங்கள் இதில் வீடியோக்களைப் பார்க்க சைன்அப் செய்யவேண்டியதில்லை. இன்ஸ்டால் செய்துவிட்டு வீடியோக்களை முன்னும் பின்னும் நகர்த்தினால் போதும். இதயத்தை அழுத்தி பிடித்திருக்கிறது என பதிவு செய்வதோடு தரவிறக்க வசதி உள்ளது. பிறருக்கும் எளிதாக பகிரமுடியும்.


இதில் இசை, சமூகம், பின்பற்றுதல் ஆகியவை உண்டு. இசை வீடியோக்களை மட்டுமல்ல. சமூகம் பற்றிய சாட்டையடி வீடியோக்களையும் கிரியேட்டிவாக உருவாக்கமுடியுமா? ட்ரில்லரில் பதிவு செய்துகொண்டு உடனே போனை எடுத்து சமூக குடிமகனாக சமூக அநீதிகளை சுட்டு சுடச்சுட பதிவேற்றலாம். வீடியோக்களைப் பார்த்துவிட்டு கரம்பற்றி பாராட்டலாம், அல்லது காரித்துப்பவும் வழியுண்டு.


இதில் பயனரின் பெயர், தகவல், அவரின் போன் உள்ள இடம், போனின் எண், வயது, பிறந்த தேதி, பாலினம், பாஸ்வேர்டு என அனைத்து தகவல்களையும் பதிவு செய்துகொள்கிறது. பேஸ்புக் ட்விட்டர் தகவல்களையும் கூட இதில் இணைத்துக்கொலலாம். அதோடு செட்டிங்கில் தகவல் சேகரிப்பை ஆப் செய்யவும் வசதிகள் உண்டு. ட்ரில்லரில் பணம் சம்பாதிக்க ட்ரில்லர் கோல்டு, ஜெம்ஸ் என்ற திமம் உள்ளது. ஒருவரைப் பின்பற்றும் ரசிகர்கள் அடிப்படையில் வருமானம் கிடைக்கும்.


வெப் யூசர்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்