கஞ்சாவை பயன்படுத்துவது சட்டப்பூர்வமாக்கப்பட்ட நாடுகள்!

 

 Marijuana, Medical, Weed, Mj, Cannabis, Drug

 

 

 பெல்ஜியம் 

இங்கு 3 கிராம் அளவுக்கு குறைவாக பயன்படுத்துவது குற்றம் கிடையாது என 2003ஆம் ஆண்டு சட்டத்தில் கூறப்பட்டுவிட்டது. 

நெதர்லாந்து

கஞ்சாவை காபி கடைகளில் பயன்படுத்துவதற்கான அனுமதி 1976ஆம் ஆண்டு கொடுக்கப்பட்டுவிட்டது. தனிநபர் பயன்பாடாக ஐந்து கிராம் அளவில் பயன்படுத்தலாம். வீட்டில் கூட ஐந்து செடிகளுக்கு மிகாமல் வளர்த்து வீட்டையும் நாட்டையும் முன்னேற்றலாம். 

போர்ச்சுக்கல் 

இங்கு 25 கிராமுக்கு மிகாமல் கஞ்சாவைப் பயன்படுத்தலாம். இதற்கான தடையை அரசு 2001ஆம் ஆண்டு விலக்கிக்கொண்டு விட்டது. 

ஸ்பெயின் 

இங்கு பொதுஇடத்தில் கஞ்சாவைப் பயன்படுத்த தடை நீடிக்கிறது. மற்றபடி தனிநபராக கஞ்சாவை பயிரிடுவது குற்றமல்ல என 2017ஆம்ஆண்டு சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. 

இத்தாலி

இங்கு மருத்துவம், தொழில்துறை சார்ந்து கஞ்சாவைப் பயன்படுத்த உரிமம் பெறவேண்டும். டிஹெச்சி என்ற அளவு குறைவாக உள்ள செடிகளை வளர்த்த அரசு அனுமதி தேவை இல்லை. நாட்டிலுள்ள மாகாணங்கள் கஞ்சா வளர்ப்பதற்கான விதிகளை தளர்த்த முயன்று வருகின்றன. 

மேற்கிந்திய தீவுகள்

இங்கு ஐந்து கிராமுக்கும் குறைவாக கஞ்சாவைப் பயன்படுத்தலாம். செடிகளையும் வளர்த்தலாம். ஜமைக்காவில் இதற்கான அனுமதி 2015இல் வழங்கப்பட்டுவிட்டது.  மதரீதியான சடங்குகளுக்கு கஞ்சாவை பயன்படுத்த தடை கிடையாது.

தென் ஆப்பிரிக்கா

தனிப்பட்ட முறையில் கஞ்சா செடியை வளர்த்து பயன்படுத்துவது குற்றமல்ல என 2018இல் சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. 

அமெரிக்கா

இங்கு பதினொரு மாநிலங்களில் கஞ்சாவைப் பயன்படுத்த தடைகள் ஏதுமில்லை. ஆனால் 16 மாநிலங்களில் தடை நீடிக்கிறது. 

பிரேசில்

வீட்டுக்கு ஒரு கஞ்சாசெடியை தோட்டத்தில் பொத்தி பாதுகாத்து வளர்த்து பயன்பெற அரசு அனுமதிக்கிறது. இதற்கான சட்டம் 2006இல் உருவாக்கப்பட்டுவிட்டது. 

இந்தியா டுடே


 





 



கருத்துகள்