இந்தியாவின் கலாசார பன்மைத்துவத்தை புரிந்துகொள்ள எனக்கு 50 ஆண்டுகள் தேவை! - வால்டர் ஜோ லிண்ட்னர், ஜெர்மன் தூதர்
வால்டர் ஜோகன்னஸ் லிண்ட்னர்
போனிடெய்ல் குடுமி வைத்துள்ள ஜெர்மன் நாட்டு தூதர் வால்டர். இவர் தூதரக பணிகளைத் தாண்டி இசைத்திறமைக்காகவும் மெச்சப்படுகிறார். ஹிப்பி இசைக்கலைஞராக இருந்து தூதராக மாறிய வால்டர், பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியாவுடன் கிடார் வாசித்த அனுபவம் கொண்டவர்.
நீங்கள் அண்மையில் உருவாக்கிய விண்ட் ஆப் சேஞ்ச் பாடலை இந்திய முறையில் உருவாக்கி இருந்தீர்கள். அதில் என்ன சவால்களை சந்தித்தீர்கள்?
அசல் பாடலின் கவர் வெர்ஷனை உருவாக்குவது இப்போதைய டிரெண்டாகி வருகிறது. விண்ட் ஆப் சேஞ்ச் பாடல், சுதந்திரம், தாராள உலகை வலியுறுத்துகிற ஒன்று. பெர்லின் சுவர் உடைக்கப்பட்டு முப்பது ஆண்டுகளுக்கு பிறகு அந்த பாடல் உருவாக்கப்பட்டது. கிழக்கு, மேற்கு நாடுகளுக்கு இடையிலான பாலங்களை அப்பாடல் குறிக்கிறது. இந்த பாடல் வீடியோவை உலக மக்கள் பலரும் பார்த்திருப்பார்கள். கோவிட் -19 சமயம் இதனை பலரும் பார்க்க வாய்ப்பு கிடைத்திருக்கும். பெர்லின் சுவர் போலவே நாமும் இந்த பெருந்தொற்று பிரச்னையை நாம் தாண்டி வரமுடியும்.
நிறைய மனிதர்கள் ஒரு விஷயத்தில் கவனம் கொள்வதே கடினம். நீங்கள் எப்படி அதிகாரி, இசைக்கலைஞர், புகைப்படக்காரர் என பல்வேறு விஷயங்களை செய்கிறீர்கள்?
தொடக்கத்தில் என்னால் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவதே கூட கடினமாகவே இருந்தது. எனக்கு பயணம் செய்வது பிடிக்கும். மொழிகள், மக்கள், அரசியல் ஆகியவற்றில் ஆர்வம் இருந்தது. அதோடு பெரும்பாலான நேரம் இசையும் கலையும் என்னை ஈர்த்துவிட்டிருந்தன. நான் டாக்சி டிரைவராக பணியாற்றிக்கொண்டு இசைக்கலைஞராக பல்வேறு நாடுகளை சுற்றி வந்துள்ளேன். இதன்மூலம் நிறைய மொழிகளை கற்க முடிந்தது. ஆனால் எனக்கு இது போதவில்லை. எனவே நான் வழக்குரைஞருக்கு படித்தேன். ஆனால் இவை அனைத்தும் குறிப்பிட்ட வரம்பிற்குள் இருந்தன. எனவே, நான் வெளிநாட்டு சேவைகளுக்குப் படித்தேன். வேலை கிடைத்துவிட்டது. இதற்கு 32 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுபற்றி எனக்கு எந்த கவலையுமில்லை.
நீங்கள் போனிடெய்ல்டு குடுமியுடன் பார்ட்டிகளில் பங்கேற்பது எப்படியிருக்கிறது?
நான் இந்த அதிகாரி பணியை குறிப்பிட்ட கட்டிடத்திற்குள் உட்கார்ந்து செய்யவேண்டியதாக நினைக்கவில்லை. ரகசியமாக பேசிக்கொண்டு பார்ட்டிகளில் பங்கேற்று இருப்பதை நான் விரும்பவும் இல்லை. தூதரக அதிகாரிகள் தங்கள் நாட்டை தூதரக அதிகாரியாக இருக்கும்போது வெளிப்படுத்தவேண்டும். ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதை விட தெருவில் இறங்கி பூட்சில் கொஞ்சம் தூசு படிவது அவசியம் என்று நான் நினைக்கிறேன். சில துணிச்சலான முடிவுகளை எடுக்க அப்போதுதான் நமக்கு சாத்தியப்படும். தூதரக அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. நான் அவர்களை இணைக்கும் பாலமாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன். மக்களையும், தொழிலதிபர்களையும், பிறரையும் எப்போதும் போலவே சந்தித்து பேசி வருகிறேன்.
நீங்கள் இந்தி கற்றுக்கொண்டு ஹோலி பண்டிகைகளை கூட கொண்டாடுகிறீர்களே?
எனது இந்தி சிறப்பானது அல்ல. ஆனாலும் நான் தினசரி இந்தியை கற்றுக்கொள்ள முயன்று வருகிறேன். நான் நியூயார்க்கில் பண்டிட் ரவிசங்கர் மற்றும் எரிக் கிளாப்டர் கான்செர்ட் விழாவில்தான் கேள்விப்பட்டேன். அப்போது இந்தியாவுக்கு வர சாத்தியமில்லை. அப்போது என் வயது 15. பின்னர் 40 வயதில்தான் இந்தியா வந்தேன். இந்தியாவில் ஆலமரம் இருக்கும். அதன் கீழே அமர்ந்து மக்கள சிதார் வாசிப்பார்கள் என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால் இந்தியா வந்து பார்த்தபிறகு இங்கு நல்லது கெட்டது என இரண்டுமே இருப்பது தெரிந்தது. பல்வேறு கலாசாரங்கள், வண்ணமயமான உலகம், மக்கள், சத்தமான உலகம், அழுக்கான வாழ்க்கை என பல்வேறு விஷயங்கள் இங்கு உள்ளன. இங்கு நிறைய முரண்டுபாடுகள் உள்ளன. இவற்றை நான் புரிந்துகொள்ள எனக்கு 50 ஆண்டுகள் தேவை.
times of india
கருத்துகள்
கருத்துரையிடுக