நம்பிக்கை மனிதர்கள் 2020 - 50 மகத்தான மனிதர்களைப் பற்றிய சுவாரசிய விளக்கம்

canva.com

 

டி. ஜெயகிருஷ்ணன், அசிமோவ் ரோபாட்டிக்ஸ் என்ற தனது நிறுவனம் மூலம் கோவிட் -19 நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள, உணவுகளைத் தருவதற்கான ரோபோக்களை உருவாக்கியுள்ளார்.


2018ஆம் ஆண்டு நிபா வைரஸ் கேரளத்தைத் தாக்கியது. இதன் காரணமாக, செவிலியர்கள் நோயாளிகளை தொடாமல் சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது. இதற்கு தீர்வு கண்டுபிடிக்க ஜெயகிருஷ்ணன் முயன்றார். அப்படி உருவானதுதான் கர்மி பாட்.

‘’’நீங்கள் எங்கள் பாட் மூலம் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளுக்கு எளிதாக உணவு மற்றும் மருந்துகளை அளிக்க முடியும். இதன் செயல்பாடுகளை செவிலியர்கள் தங்கள் அறைகளிலிருந்து கண்காணிக்க முடியும் ’’ என்கிறார் டி.ஜெயகிருஷ்ணன்.


தற்போது கர்மி பாட் அதிநவீனமான செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்குகிறது. மருந்துகள், உணவுகள் ஆகியவற்றை நோயாளிகளுக்கு அளிக்கிறது. இதோடு அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் புற ஊதாக்கதிர்கள் மூலம் சுத்தப்படுத்தி எடுத்துக்கொண்டு வருகிறது. மேலும் நோயாளியின் உடல் வெப்பநிலையையும் கணக்கிட முடிகிறது. இதனை மொபைல் செயலி மூலம் கட்டுப்படுத்த முடியும். தேவையெனில் நோயாளியிடம் பேசுவதற்கான திறனையும் கொண்டுள்ளது. தற்போது கூடுதலாக தரையை துடைக்கும் கிருமிநாசினி வசதியையும் கொண்டுள்ளது. மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட இரண்டு நிறுவனங்களில் நிறுவப்பட்டுள்ளது. இந்த ரோபோக்களில் விழிப்புணர்வு வீடியோக்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. ‘’’எங்களால் முடிந்தவரை மருத்துவமனை ஊழியர்களுக்கு உதவ முயன்று வருகிறோம. ஆனால் பொதுமுடக்கம் இன்னும் நீடிப்பதால் ரோபோக்களுக்கு பழுது ஏற்பட்டால் கூட அதனை சரிசெய்வதற்கான வழி தென்படவில்லை. இப்போதைக்கு மனிதர்கள் புழங்கமுடியாத இடங்களில் ரோபோக்கள் பயன்படும்.’’ என்கிறார் அசிமோவ் ரோபாட்டிக்ஸ் நிறுவனர் டி. ஜெயகிருஷ்ணன்.


-இவர் போன்ற ஐம்பது மனிதர்களின் செயல்பாடுகளை நம்பிக்கை மனிதர்கள் 2020 நூல் பேசுகிறது. சமூக பிரச்னைகளை மையமாக கொண்ட இந்த மனிதர்கள் அதற்கான கண்டுபிடிப்பையும் செய்து வருகிறார்கள். இவர்கள் போன்றவர்களால்தான் சமூகம் என்ற சொல் வலிமை பெறுகிறது. 

 

இந்நூலை அமேஸான் தளத்தில் நீ்ங்கள் கணக்கு தொடங்கி வாசிக்கலாம். நன்றி1





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்