இடுகைகள்

பசுமை ஆட்டோ! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பசுமை ஆட்டோ - இலங்கை இளைஞரின் முயற்சி!

படம்
பசுமைவழியில் இலங்கை ! ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் பொதுப்போக்குவரத்து தாண்டி உலகப்புகழ்பெற்றது ஆட்டோக்கள்தான் (Tuk-Tuk). இலங்கையைச் சேர்ந்த பொறியாளரான சசிரங்கா டி சில்வா , இந்த ஆட்டோக்களின் ஒலியை மாற்றி சூழலை காப்பாற்றும் சிந்தனையை செயல்படுத்தி வருகிறார் . மலிவான விலையில் பயன்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டாரை உருவாக்கி ஐ . நாவின் உதவித்தொகை 10 ஆயிரம் டாலர்களை வென்று சாதித்திருக்கிறார் சசிரங்கா . கொழும்புவிலுள்ள மொராட்டுவா பல்கலை ஆசிரியரான சசிரங்கா ஒரு மில்லியன் மக்களுக்கான எந்திர கிட்டை உருவாக்கி சோதித்து வருகிறார் . இந்தியாவிலிருந்து ஆட்டோக்களுக்கான டூ ஸ்ட்ரோக் எஞ்சின்களை இறக்குமதி செய்த இலங்கை அரசு , 2008 ஆம் ஆண்டு மாசுபாடு காரணமாக அதனை தடைசெய்துவிட்டது . வங்கதேசம் , இந்தியாவில் பெரும்பகுதி ஆட்டோக்கள் இயற்கை எரிவாயுக்கு மாறியுள்ளன . இயற்கை எரிவாயு வண்டி விலை 4,300 டாலர்கள் என்றால் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் வண்டி 5,900 டாலர்கள் செலவாகிறது . " நூறு கி . மீ தொலைவுக்கு சார்ஜ் செய்யும் நிலையங்கள் தேவை ." என்கிறார் ஓட்டுநர்கள் சங்க தலைவர் ஏ . டி . ஆல்விஸ் .