இடுகைகள்

இவலைத்தளம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாங்கள் உருவாக்கிய இவலைத்தள முறையை யாருமே நம்பவில்லை! - மார்க்கோஸ் கால்பெரின், லத்தீன் அமெரிக்கா

படம்
        மார்க்கோஸ் கால்பெரின், இ வணிக நிறுவனர், லத்தீன் அமெரிக்கா சியரா நியூஜென்ட், டைம் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளை விட லத்தீன் அமெரிக்காவில் இ வணிகம் எப்படி மாறுபடுகிறது? இங்கு நாங்கள் அனைத்தையும் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கினோம். இ வணிகத்திற்கான அடிப்படைகளையும், போக்குவரத்துகளையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். அப்படித்தான் உலகளவிலான போட்டியாளர்கள் இபே, அமேசானை சமாளிக்கிறோம். எங்களது வளர்ச்சியைப் பார்த்தால் ஒரே இரவில் வளர்ந்தது போல தெரியலாம். ஆனால் எங்கள் வளர்ச்சி இருபது ஆண்டுகள் உழைப்பால் உருவானது. மெர்காடோ லிப்ரே முறை எப்படி வெற்றி பெற்றது? நாங்கள் ஸ்டான்போர்டைச் சேர்ந்த இருபது லத்தீன் அமெரிக்க நண்பர்களிடையே இந்த முறையை எடுத்து சொன்னபோது, அதனை யாரும் நம்பவில்லை. ஆனால் இன்று அந்த இவலைத்த முறை வெற்றி பெற்றுள்ளது. அன்று இந்த முறையை யாரும் பார்த்ததில்லை. செயல்படுத்தியதில்லை. எனவே அதனை யாரும் நம்பவில்லை. பெருந்தொற்று காலம்  நிறைய பாகுபாடுகளை லத்தீன் அமெரிக்காவில் ஏற்படுத்தியுள்ளது. உங்கள் வணிகம் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதா? நிச்சயமாக. நீண்டகால நோக்கில் பொருளாதார வளர்ச்சி முக்கியமானது. ப

அமெரிக்காவைத் தாயகமாக கொள்ளாத பெரு நிறுவனங்கள்! முன்னிலை வகிக்கும் அலிபாபா!

படம்
          அமெரிக்காவைத் தாயகமாக கொள்ளாத பெரு நிறுவனங்கள் இவை சாப்ட் பேங் டோக்கியோ ஜப்பான் 89.7 பில்லியன் ஜப்பானைச் சேர்ந்த சாப்ட் பேங்க் பெரும்பாலும் ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்து வெற்றி பெற்றுவருகிறது. உபர், பைட்டான்ஸ் ஆகிய நிறுவனங்களில் நிறைய முதலீடு செய்துள்ளது. முதலீட்டு விஷயங்களை விஷன் ஃபண்ட் என்ற நிறுவனம் செய்து வருகிறது. தற்போது செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் மீது கவனம் செலுத்த முயன்று வருகிறது.லாபம் வராத வீவொர்க் நிறுவனத்திற்கான முதலீட்டை முட்டாள்தனதானது என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுவிட்டார் இதன் சிஇஓவான மசோயாஷி சன். டிசிஎஸ் 100. 7 பில்லியன் மும்பை, இந்தியா இந்த நிறுவனத்தை டாடா குழுமம் இயக்குகிறது. இந்த குழுமம் உப்பு, உரம், இரும்பு, வேதிப்பொருட்கள், வாகனங்கள் என பல்துறை சார்ந்தும் இயங்குகிறது. கோவிட் -19 சார்ந்து பல்வேற செயல்பாடுகளை அரசுடன் இணைந்து செய்துள்ளது டாடா. ஏஎஸ்எம்எல் ஹோல்டிங் 124.5 பில்லியன் டாலர் வெல்தோவன், நெதர்லாந்து பெரு நிறுவனங்களின் பட்டியலில் உள்ள டச்சு நிறுவனம் இது ஒன்றுதான். மென்பொருள், வன்பொருள் ஆகிய நிறுவனங்களை தனது வாடிக்கையாளர்களாக கொண்டுள்ளது. உலகின்