காதலியின் தந்தையோடு சவால்விட்டு அவரது சொத்துக்களை அபகரிக்கும் நாயகன்!
பம்பர் தெலுங்கு சாய் சங்கர், பிந்து மாதவி கதை திரைக்கதை பூரி ஜெகன்னாத் ஏழை,பணக்கார காதல் கதை. ட்விஸ்ட் என்னவென்றால், ஏழை பணக்காரனாக முன்னேறவில்லை. தான் இருக்கும் நிலைக்கு பணக்காரனை கொண்டு வருகிறான். அவ்வளவுதான். அதுதான் படம். வித்தியாசம் என்ற பெயரில் கதையை யோசித்திருக்கிறார்கள். ஆனால், நினைத்தது போல படம் காட்சிரீதியாக சரியாக வரவில்லை. படத்தில் குமாஸ்தாவாக நடித்துள்ள சந்திரமோகன் மட்டுமே சற்று நடைமுறையான சிக்கல்களை அறிந்து புரிந்துகொண்டிருக்கிறார். அவர் மட்டுமே பரவாயில்லை எனும்படி நடித்திருக்கிறார். மற்றவர்கள் எல்லாம் நேராக பூரி ஜெகன்னாத்தின் உலகில் இருந்து திடீரென பூமிக்கு வந்து இறங்கியவர்கள். எந்த பாத்திரத்திலும் நம்பகத்தன்மை இல்லை. வினோதமாக பேசிக்கொண்டு திரிகிறார்கள். லூசு நாயகிகளை உருவாக்குவதில் தெலுங்கு படங்கள் சலிப்பதேயில்லை. அந்த வகையில் இப்பட நாயகியும் விதிவிலக்கில்லை. ஆணவமும் முன்கோபமும் கொண்ட நாயகி. இவள் மெக்கானிக் ஒருவன் மீது காதல்வயப்படுகிறாள். இந்த காதல் எப்படி இருக்கிறதென்றால், அவள் இதுவரை அனுபவித்த அத்தனை வசதிகளும் கையைவிட்டு போகிறது. அப்போது கூட அவளுக்...