இடுகைகள்

பதப்படுத்தல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உணவைக் கெடாமல் பாதுகாக்க இத்தனை வேதிப்பொருட்கள் தேவை!

படம்
  உணவுப்பொருட்களில் பயன்படும் முக்கியப் பொருட்கள் பிரசர்வேட்டிவ். தொன்மைக்காலத்தில் உப்பு, வினிகர், வாசனைப் பொருட்கள், எண்ணெய் ஆகியவை பயன்பட்டன. இப்போது நிறைய வேதிப்பொருட்களை உணவுப்பொருட்கள் கெடாமல் இருக்க பயன்படுத்துகின்றனர். அவற்றைப் பார்ப்போம்.  ஸ்டேபிலைசர்ஸ் இதில் எமுல்சிஃபையர்ஸ், திக்னர்ஸ், ஜெல்லிங் ஏஜெண்ட்ஸ், ஹியூமெக்டன்ஸ், ஆன்டி கேக்கிங் ஏஜெண்ட்ஸ்  ஆகிய பொருட்கள் உள்ளடங்கும்.  இதெல்லாம் எதற்கு? உணவு கெட்டுப்போகாமல் இருக்கத்தான்.  நைட்ரேட்ஸ் -நைடிரைட்ஸ் இறைச்சியில் நுண்ணுயிரிகள் வளராமல் தடுக்கும் வேதிப்பொருள். இதனை சேர்த்தால் இறைச்சியில் சிவப்பு நிறம் கூடுதலாக இருக்கும்.  ஆன்டிபயாடிக்ஸ் பண்ணை விலங்குகளின் இறைச்சியில், பதப்படுத்தப்பட்ட கேன் உணவுகளில் பயன்படும் வேதிப்பொருள். எடுத்துக்காட்டு டெட்ராசைகிளைன்ஸ்.  ஹியூமெக்டன்ட்ஸ்  இவை, பொருளில் உள்ள ஈரப்பத தன்மையைக் குறைக்கிறது. இதன் காரணமாக பொருள் அதன் இயல்பான தன்மையில் சில காலம் நீடிக்கும். எடுத்துக்காட்டு துருவிய தேங்காய்.  ஆன்டி ஸ்டாலிங் ஏஜெண்ட்கள் சில பொருட்களில் சேர்க்கப்படுகின்றன. இவை பேக்கரி உணவுகளில் ஈரப்பதமும், மென்மையும் குறை

விண்வெளியில் சத்தான உணவு!

படம்
  விண்வெளியில் சத்தான உணவு!  விண்வெளி வீரர்கள், விண்கலத்தில் பயணிக்கும்போது சாப்பிடுவதற்கான உணவுகளை சரியான முறையில் தயாரிக்க ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.  விண்வெளியில் ஈர்ப்பு விசை குறைவு. இதன் காரணமாக அங்கு பயணிக்கும் விண்வெளி வீரர்களின்  உடல் எடை குறைவதோடு, எலும்புகளின் அடர்த்தியும் பாதிக்கப்படுகிறது. இதற்காக வீரர்களுக்கென  சத்துக்கள் நிறைந்த உணவுகள் தயாரிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு அதிக நாட்கள் தாங்கும்படி அனுப்பி வைக்கப்படுகின்றன.  பூமியில் ஒருவர் சாப்பிடும் அனைத்துப் பொருட்களையும் விண்வெளியில் சாப்பிட முடியாது. இவர்களுக்கென அமெரிக்காவின் நாசா அமைப்பு, சிறப்பு வகை உணவுகளை தயாரித்து வருகிறது. விண்வெளி வீர ர்கள் தினசரி 2,700 லிருந்து 3,700 வரையிலான கலோரிகளை உணவிலிருந்து பெறுவது அவசியம். அப்படி பெறமுடியாதபோது, அவர்களின் உடல்நிலை பாதிக்கப்படும். இப்படி விண்கலனில் தயாரித்து அனுப்பப்படும் உணவு மாதங்கள், ஆண்டுகள் என கெடாமல் இருக்கும்.  பூமியில் நீங்கள் சாப்பிடுவது சிறப்பான உணவு என்றால் அது விண்வெளியிலும் சிறப்பான உணவாகவே இருக்கும் என்றார் நாசாவின் உணவு தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சிப்