இடுகைகள்

பேரிடர் மேலாண்மை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முதல்வர் பதவி வகிக்கும் மன்னர் - நவீன் பட்நாயக்கின் வெற்றிக்கதை!

படம்
நவீன் பட்நாயக் பிஜூ ஜனதா தளத்தின் தலைவர். அதிகபட்சமாக பெண்களை தேர்தலில் பங்கேற்கச்செய்தவர். ஐந்தாவது முறையாக ஒடிஷாவின் முதல்வராக இருக்கையைத் தக்க வைத்துக்கொண்டிருக்கிறார். பிஜூ ஜனதா தளத்திற்கு எதிராக பாஜக சில இடங்களை வென்றுவந்தாலும், மன்னர் போல ஐந்து முறை ஒடிஷாவில் சாதித்தவர் என்பதற்காகவே இவரைப் பற்றி பேசுகிறோம். 72 வயதாகும் நவீனுக்குப் பிறகு கட்சி என்னாகும் என்ற கவலையும் பிறருக்கு உண்டு. ஆனால் மக்களுக்கான நலன்களே முக்கியம் என்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் நவீன் பட்நாயக். பஞ்சாயத்து தேர்தலில் கூட நின்று வென்றிராதவர், ஒரிய மொழி தெரியாதவர் என ஆச்சரியங்களோடு இருக்கிறார் இம்மாநில முதல்வர். 1960 களில் காங்கிரஸ் அரசு, ஒரிய மொழியை கட்டாய ஆட்சிமொழியாக மாற்றியது. ஆனாலும் நவீன் பட்நாயக் அதனை பெரிதாக தொடரவில்லை. காரணம் பழங்குடிகள் வாழும் தேசத்தில் ஒரியமொழியை கட்டாயமாக்கி என்ன பிரயோஜனம் என்று நினைத்ததுதான். அதனால், தமிழ், மராத்தி மொழிகள் போன்று பெரிய பெருமை ஒரியமொழிக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் என்ன நவீன் பட்நாயக் போன்ற தன்மையான தலைவர் ஒடிஷாவுக்கு கிடைத்திருக்கிறாரே  என மக்கள் சமாதான