இடுகைகள்

காடுகளின் பரப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அளவுகோலை மாற்றி காடுகளை அதிகரித்து காட்டும் இந்திய அரசு!

படம்
  இந்தியாவில் அதிகரிக்கும் பசுமைப் பரப்பு! - உண்மை என்ன? அண்மையில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தியாவிலுள்ள காடுகளின் பசுமை பரப்பு பற்றிய அறிக்கையை(2021) வெளியிட்டது. கடந்த  ஜனவரி மாதம் 13இல் வெளியான அறிக்கை  காடுகளின் பரப்பு அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டியது. 2019ஆம் ஆண்டை விட காடுகளின் பரப்பு அதிகரித்து 1,540 சதுர கி.மீ. ஆக உயர்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.  இந்திய அரசுக்காக வனத்துறை ஆய்வு நிறுவனம் (FSI), காடுகளின் பரப்பு பற்றிய ஆய்வறிக்கையை தயாரிக்கிறது. இந்த அமைப்பின் தகவல்படி, இந்திய நிலப்பரப்பில் 21.67 சதவீதம் காடுகள் உள்ளன. மொத்தமுள்ள காடுகளின் பரப்பு 7,13,789 சதுர கி.மீ. அறிக்கைப்படி, முந்தைய ஆண்டுகளை விட மாநிலங்களில் காடுகளின் பரப்பு அதிகரித்து வருகிறது என வன ஆய்வு அமைப்பு தகவல் கூறுகிறது. 1981ஆம் ஆண்டு வனத்துறை ஆய்வுநிறுவனம் உருவாக்கப்பட்டது.  1988ஆம் ஆண்டு முதல் காடுகளின் பரப்பு பற்றிய அறிக்கையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிட்டு வருகிறது.  சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், ”17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான