இடுகைகள்

வரலாறு- போதை டாக்டர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போதைக்கு அடிமையானவரின் மருத்துவ கண்டுபிடிப்பு!

படம்
போதை அடிமையின் கண்டுபிடிப்பு ! 1852 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்த வில்லியம் , உல்லாசமான உடை அணிந்து பார்ட்டிகளுக்கும் சென்று மது அருந்துவதை இறுதிவரை விரும்பினார் . நியூயார்க் மருத்துவமனையில் மருத்துவரான வில்லியம் , பல்வேறு கடின அறுவைசிகிச்சைகளை செய்யத்தயங்காதவர் . ஐரோப்பாவில் மருத்துவ உயர்படிப்பு படித்தவர் , நண்பர்களிடம் பெற்ற 10 ஆயிரம் டாலர் பணத்தில் அதிநவீன அறுவை சிகிச்சை தனிப்பட்ட முறையில் அமைத்தார் . ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் மூத்த சர்ஜனாகவும் , பேராசிரியராகவும் பல இளைய மருத்துவர்களுக்கு முன்னோடி இவரே . அதேநேரம் கோகைன் வாங்குவதற்கான ஆபரேஷன்களையும் தன் வகுப்புகளையும் கைவிட்டு செல்லவும் தயங்காதவர் வில்லியம் .  வலிநிவாரணியாக கோகைனை உடலில் செலுத்தி சோதித்த வில்லியன் பின்னாளில் அதன் சேவகனானது கொடுமை . மார்பக புற்றுநோய் , குடல் இறக்கம் போன்ற சிகிச்சை குறித்த குறிப்புகளையும் வில்லியம் எழுதினார் . 1922 ஆம் ஆண்டு மஞ்சள் காமலை , நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துபோனார் வில்லியம் .