போதைக்கு அடிமையானவரின் மருத்துவ கண்டுபிடிப்பு!
போதை
அடிமையின் கண்டுபிடிப்பு!
1852 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க்கில்
பிறந்த வில்லியம், உல்லாசமான உடை அணிந்து பார்ட்டிகளுக்கும் சென்று
மது அருந்துவதை இறுதிவரை விரும்பினார்.
நியூயார்க் மருத்துவமனையில் மருத்துவரான வில்லியம், பல்வேறு கடின அறுவைசிகிச்சைகளை செய்யத்தயங்காதவர். ஐரோப்பாவில்
மருத்துவ உயர்படிப்பு படித்தவர், நண்பர்களிடம் பெற்ற
10 ஆயிரம் டாலர் பணத்தில் அதிநவீன அறுவை சிகிச்சை தனிப்பட்ட முறையில்
அமைத்தார். ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனையில் மூத்த சர்ஜனாகவும்,
பேராசிரியராகவும் பல இளைய மருத்துவர்களுக்கு முன்னோடி இவரே. அதேநேரம் கோகைன் வாங்குவதற்கான ஆபரேஷன்களையும் தன் வகுப்புகளையும் கைவிட்டு
செல்லவும் தயங்காதவர் வில்லியம்.
வலிநிவாரணியாக கோகைனை உடலில்
செலுத்தி சோதித்த வில்லியன் பின்னாளில் அதன் சேவகனானது கொடுமை. மார்பக புற்றுநோய், குடல் இறக்கம் போன்ற சிகிச்சை குறித்த
குறிப்புகளையும் வில்லியம் எழுதினார். 1922 ஆம் ஆண்டு மஞ்சள்
காமலை, நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்துபோனார் வில்லியம்.