டைப் ஏ ஆளா நீங்கள்?



Image result for type a personality



டைப் ஆளா நீங்கள்?


பொறுமையின்மை, கோபம், ஆக்ரோஷம், நேரந்தவறாமை, வேகம் ஆகியவை கொண்டவர்கள் டைப் ஆட்கள் எனவும், நிதானமாக ரிலாக்ஸாக வேலை செய்பவர்களை டைப் பி எனவும் குறிப்பிடுகிறார்கள். எப்படி வந்தது இந்த டைப் சொற்கள்?
1959 ஆம் ஆண்டு மேயர் ஃப்ரீட்மன் மற்றும் ரே ரோஸ்மன் ஆகியோரின் ஆராய்ச்சி விளைவாக கடுமையான போட்டியாளர், நிதானமற்ற, செயல்திறமை கொண்டவர்களுக்கு ஏழு மடங்கு பிறரைவிட இதயநோய் தாக்கும் என கண்டறிந்து அத்தகையோரை டைப் என மருத்துவ வட்டாரம் குறிப்பிடத்தொடங்கியது. மேற்கண்ட ஆராய்ச்சியாளர்கள் இந்த குணநலன்களைப் பற்றி Type A Behavior and Your Heart(1974)  என்ற நூலை எழுதினர். பின்னரே மக்கள் மத்தியில் குணநலன்களைப் பற்றிய டைப் ,பி சொற்கள் புழங்கத் தொடங்கின. இந்த ஆராய்ச்சியின் தொடக்கம் இருவரின் கிளினிக்கில் இருக்கைகளை பழுதுபார்க்கும்போது தொடங்கியது. சேர்களின் விளிம்பு மட்டும் அதிகம் சேதமுற்றிருந்தன.

டாக்டர் தன்னை விரைவில் கூப்பிடுவார் என சீட்டின் நுனியில் பதட்டமாக காத்திருந்திருந்த நோயாளிகளால் நிறைய சேர்கள் பழுதாகிவிட்டிருந்தன. இன்று டைப் ஆய்வு பயன்படாது பல்வேறு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்