மார்க்கெட்டைக் கலக்கும் ஈஸி போன்கள்!
ஈஸி
போன்கள்!
தற்போது பெரிய ஸ்க்ரீன்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்களைவிட
பட்டன்களைக் கொண்ட 4ஜி வசதியுள்ள குறைந்தவிலை போன்கள்
மார்க்கெட்டில் பரபரவென விற்று வருகிறது. எ.கா.மைக்ரோமேக்ஸ் பாரத் 1(ரூ.1,899),
லாவா கனெக்ட் 1(ரூ.3,599), ரிலையன்ஸ் ஜியோ(ரூ.1,500) போன்கள்.
சல்லீசான ரேட், கீபேட்
இருப்பதால் துல்லியமாக டைப் செய்யும் வசதி, இரு சிம்களை பயன்படுத்த
முடிவதோஉட மூன்றுநாட்களுக்கு தாங்கும் சார்ஜ், சிம்பிளான லாவகமாக
கையாளும் போன்.
ஸ்மார்ட்போன்களைப் போல அடிக்கடி அப்ளிகேஷன் அப்டேட்
தேவையில்லை. 4ஜியில் கிடைக்கும் இப்போன்களில் சர்ச், மேப், இமெயில்,ப்ளூடூத்,
வைஃபை வாய்ஸ் உதவியாளர் ஆகிய ஸ்மார்போன் வசதிகளும் இதில் உண்டு.
விரைவில் வெளியாகவிருக்கும் நோக்கியா
8110 போனை ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் வெளியிடுகிறது. "உலகம் முழுவதும் Feature எனும் இவ்வகை போன்களின் அளவு
1.3 பில்லியன். நாங்கள் இவ்வகையில் பிரீமியம் போன்களையும்
வெளியிடவிருக்கிறோம்" என்று இந்நிறுவனத்தின் தகவல் அறிக்கை
தெரிவிக்கிறது.