சாச்சா சௌத்ரி காமிக்ஸ்: துப்பறிகிறார் மோடி!
ஜெயில் ரேடியோ!
சிறைவாசம் பெறும் கைதிகள், அங்கு தான் செய்த தவறுகளுக்கு வருந்தி திருந்துவதுதானே தண்டனையின் நோக்கம். அதற்காகவே மகாராஷ்டிராவிலுள்ள அகமதுநகர் சிறை நிர்வாகம் ரேடியோ ஸ்டேஷனை உருவாக்கியுள்ளது.
அகமது நகரிலுள்ள சிறை ரேடியோ நிர்வாகம், முழுக்க கைதிகளின்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. "சிறைக் கைதிகளால் நடத்தப்படும் இந்த ரேடியோவில் நேயர்விருப்ப பாடல்கள், சுகாதார நிகழ்ச்சிகள், ஆன்மிக பாடல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன" என்கிறார் சிறை சூப்பரிடெண்டான என்.ஜே.சாவந்த். இதுபோன்ற நிகழ்ச்சிகள் சிறைக்கைதிகளின் மனதை எதிர்மறையிலிருந்து நேர்மறை எண்ணங்களுக்கு திருப்பும் என்பது சிறைநிர்வாகத்தின் நம்பிக்கை.
டொனேஷன் முக்கியம்
பாஸ்!
மக்களின் நலனிற்காக
அயராது பாடுபடும் தேசிய கட்சிகள் நன்கொடைகள் பெறுவதில் சாதனை செய்துள்ளன. 2016-7 ஆண்டில் தேசிய கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடைகளின் அளவு 1,559.17 கோடி மட்டுமே.
இதில் பாஜக, 2015-16 ஆண்டில் பெற்ற டொனேஷன்களை பீட் (76.85 கோடி) செய்து 532.27 கோடி சம்பாதித்துள்ளது. கைக்கட்சி 41.90
கோடி பெற்று நன்கொடையில்
105 சதவிகித வளர்ச்சி பெற்றுள்ளது. கட்சியின் சொத்து,
வரி, உறுப்பினர் கட்டணம், வங்கி பணத்திற்கான வட்டி ஆகியவை கட்சிக்கான வருமான வரம்பிற்குள் வரும்.
இவ்வாண்டில் டொனேஷன் கிடைக்காத வறுமையான கட்சி பகுஜன் சமாஜ்தான்.
20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்சிகள் பெற்ற நன்கொடைகளை கணக்கிட்டு இந்த
ஆய்வை Association for Democratic Reforms (ADR) and National Election
Watch (NEW) ஆகிய அமைப்புகள்
இணைந்து செய்துள்ளன.
துப்பறிகிறார்
மோடி!
பால்யத்தின் கனவுலகை
திறந்துவைக்கும் காமிக்ஸை பிடிக்காதவர்கள் யார் இருக்கிறார்கள்? எனவே குழந்தைகளையும்
கவர் செய்ய காமிக்ஸில் நூல்களிலும் பிரதமர் மோடி களமிறங்கி குற்றங்களை துப்பறிய உள்ளார்.
சாச்சா சௌத்ரி
தன் உதவியாளர் சாபுவோடு குற்றங்களை கம்ப்யூட்டரை விட வேகமாக துப்புதுலக்கும் காமிக்ஸ்
புத்தகங்கள் இந்தியாவில் வெகு பிரபலம். தற்போது சர்வ சிக்சான் அபியான்
திட்டத்தின் கீழ் இக்காமிக்ஸ் புத்தகத்தை நூலகங்களுக்கும்
வழங்க மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது. இதில்தான் சாச்சா சௌத்ரி
மற்றும் மோடி என ஒரு கதை எழுதப்பட்டு வெளியாகியுள்ளது. எதிர்கட்சிகள்
கல்வித்திட்டத்தை பாஜக தனது விளம்பரத்திற்காக பயன்படுத்திக்கொள்கிறது விமர்சனங்களை
எழுப்பி வருகின்றன.
அமைதிக்கு களப்பலி!
கடந்த எழுபது ஆண்டுகளில்
உலகெங்கும் அமைதிக்கு பாடுபடும் ஐ.நாவின் ராணுவப்படையில் பங்கேற்ற
இந்திய வீரர்கள் பெருமளவு பலியாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதிலுமிருந்து 163 ராணுவப்பிரிவுகளைக்
கொண்டுள்ள ஐ.நா அமைதிப்படை 1948 ஆம் ஆண்டிலிருந்து
இயங்கி வருகிறது. இதில்
இறந்துபோன 3,737 பேரில் 163 வீரர்கள் இந்தியர்களே.
ஐ.நா அமைப்பில் ராணுவ உதவிகளை வழங்கும் மூன்றாவது
பெரிய நாடு இந்தியா ஆகும். மத்திய கிழக்கு, ஹைதி, லெபனான், சைப்ரஸ்,
காங்கோ, சகாரா, தெற்கு சூடான்
ஆகிய இடங்களில் 6,693 வீரர்கள் ராணுவப்பணியில் உள்ளனர்.
"நீலநிற ஹெல்மெட் அணிந்து அமைதிக்கு பாடுபடும் வீரர்களுக்கு நெஞ்சார்ந்த
அஞ்சலியை செலுத்துவோம். தற்போது 13 அமைதி
திட்டங்களை செயல்படுத்திவருகிறோம்" என்று பேசினார் ஐ.நா தலைவரான அன்டானியோ குட்டேரஸ். ஐ.நா பாதுகாப்பு படை தொடங்கி எழுபது ஆண்டை முன்னிட்டு நடந்த விழாவில் உயிர்நீத்த
வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.