விவேகானந்தர் இஸலாமியர்களை பற்றி கூறியது என்ன?

Related image





முத்தாரம் நேர்காணல்

டி.என்.ஜா, வரலாற்று ஆய்வாளர்

தமிழில்: .அன்பரசு

வரலாற்றை ஒற்றைத்தன்மையுடையதாக மாற்றும் இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் ஆய்வாளர் டி.என்.ஜா, பசுவின் புனித தன்மை, பாரதமாதா கோஷம், ஜெய் ஹிந்த் ஆகியவை அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற சமத்துவத்தை உடைக்க துடிக்கும் செயல்பாடுகளைப் பற்றியும் உரையாடுகிறார். அண்மையில் Against the Grain எனும் டி.என்.ஜாவின் நூல் வெளியாகியுள்ளது.

அரசியலமைப்புச்சட்டம் இந்தியா என்பது பாரதம் என்று கூறுகிறது. பாரதம் என்ற நாடு இல்லை என்ற நிலையில் தேசிய உணர்ச்சியை தூண்டும் பாரத மாதா கீ ஜே என்ற சுலோகன் உண்மையா?

வேத எழுத்துக்களில் பாரதம் என்ற நாடு பற்றிய தகவல்கள் உள்ளன. முதல் நூற்றாண்டில் கலிங்க அரசர் கரவேலா காலத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பின் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இப்பதம் பேச்சு வழக்குக்கு திரும்பியது. இன்று தாயைப் போல மரியாதை அளிக்கப்படுகிறது. த்விஜேந்திர லால்ராய்(1853-1913) என்பவரின் பாடலில் பாரதமாதா என்ற சொல் வருகிறது. 1904 ஆம் ஆண்டு விக்டோரியா ராணியை பாரத மாதாவாக, அல்லது பாரதமாதா இங்கிலாந்து கொடியை கையில் வைத்திருக்கும் கேலிப்படங்கள் வெளியாயின. கோமாதாவுக்கும் பாரதமாதாவுக்கும் வயது நூற்றாண்டு இருக்கலாம். இதோடு மத்தியப்பிரதேச அரசு புதிதாக ராஷ்டிரமாதா என்ற பதத்தை வேறு கண்டுபிடித்துள்ளது.

அண்மையில் தயானந்த சரஸ்வதி, மற்றும் ராமகிருஷ்ண பரமஹம்சா ஆகியோரின் பிம்பங்கள் மறுஎழுச்சியுடன் எழுகின்றனவே?
1875 ஆம் ஆண்டு ஆர்ய சமாஜத்தை தொடங்கினார் தயானந்த சரஸ்வதி. அதே ஆண்டு சத்தியார்த்த பிரகாஷ் என்ற நூலை எழுதினார். இந்நூலில் இரு அத்தியாயங்கள் கிறிஸ்தவம் மற்றும் இஸ்லாமை கடுமையாக வசைபாடியிருப்பார். அத்வைத வேதத்தை பரப்பிய ராமகிருஷ்ண மிஷனைச் சேர்ந்த விவேகானந்தர் 1900 ஆம் ஆண்டு பிப்.3 அன்று "பசிபிக் முதல் அட்லாண்டிக் வரை ஐநூறு ஆண்டுகள் இஸ்லாமியர்களால் ரத்த ஆறு ஓடியது" என்று பேசினார். மேற்கூறிய மகத்தான ஆன்மிக தலைவர்களை நாம் இன்று ஏற்றுள்ளோம். இவர்களின் வழித்தோன்றலான கருத்தினை பின்பற்றுபவர்கள்தான் இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் தாக்கி கொல்வதோடு பெண்களுக்கு எதிரான வன்முறையிலும் ஈடுபடுகின்றனர். மனிதர்களை அவர்களின் விருப்பத்திற்கேற்ற மதத்தை பின்பற்ற அரசியலமைப்பு சட்டத்தின்படி அனுமதிப்பதே நல்லது.

கர்நாடக அரசு லிங்காயத்து மக்களை தனி மதமாக அங்கீகரித்தது பற்றிய உங்கள் கருத்து?

வடமேற்கு கர்நாடகத்தில் பனிரெண்டாம் நூற்றாண்டிலிருந்து வாழ்ந்து வரும் லிங்காயத்து மக்கள் பெரும்பான்மையான சக்தியாக உருவாகியுள்ளனர். பசவண்ணா இந்து, சாதி, வேதம் ஆகியவற்றுக்கு எதிராக மக்களை திரட்டி அவர்களுக்காக பாடுபட்டுள்ளார். இவரை பின்பற்றுபவர்கள் இஷ்டலிங்கத்தை தங்களின் உடலில் அணிந்துள்ளனர். லிங்காயத்துகளை தனி மதமாக அங்கீகரித்ததில் அரசுக்கு பல்வேறு ஆதாயங்கள் அடங்கியிருக்கலாம்.

தலித்களை இந்துத்துவா பயங்கரத்திலிருந்து காப்பாற்ற மாயாவதி பௌத்த மதத்திற்கு மாற தூண்டுகிறார். வரலாற்றில் இதுபோல நிகழ்வுகள் நிகழ்ந்ததுண்டா?

பாண்டிய மன்னர் சமண மதத்திலிருந்து சைவத்திற்கு மாறியதை உறுதிபடுத்த நம்மிடம் சான்றுகளில்லை. இந்திய சாதி அமைப்பின் பிரச்னைகளிலிருந்து தப்பிக்க கிறிஸ்தவம் அல்லது இஸ்லாம் அல்லது பௌத்த மதத்தை பெரும்திரள் மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். 1956 ஆம் ஆண்டு பாபாசாகிப் அம்பேத்கரும் தலித் மக்களை பௌத்தத்திற்கு மதம் மாற்றியது சாதி இழிவிலிருந்து வெளியேற்றத்தான்.

நன்றி: ZIYA US SALAM, www.frontline.in