வீக்எண்ட்பிட்ஸ்: பாயசத்திற்கு முந்து!
கணவரைக் கொல்ல
கல்யாண மோதிரம்!
பெற்றோர் பார்த்துவைத்த
கல்யாணம்.
மனம்கொள்ளாத மகிழ்ச்சியோடு சரஸ்வதிக்கு மங்கலநாணை முடிச்சிட்டார் ஆந்திராவின்
விழியாநகரத்தைச் சேர்ந்த யமகா கௌரிசங்கர். ஆனால் பத்து நாட்களில்
தன் உயிர்பறிபோக மனைவியே காரணமாக இருக்கப்போகிறாள் என்ற உண்மையை அவர் அறியவில்லை.
கல்யாணத்திற்கு முன்பே கௌரியின் மனைவி
சரஸ்வதிக்கு இருந்த காதல் உறவு, திருமணத்திற்கு முறித்துபோட்டிருக்கிறது.
ஷாப்பிங் சென்றுவிட்டு வரும்போது ஒன் பாத்ரூம் அவசரம் சொல்லி பைக்கிலிருந்து
நைசாக சரஸ்வதி இறங்கிக்கொண்டார். பிளான் செய்த கூலிப்படையினர்
மூவர் பைக்கிலிருந்த கௌரிசங்கரை இரும்புராடால் தலையில் அடிக்க, ஸ்பாட்டிலேயே கௌரி அவுட். பின் நகையை மறைத்து வைத்துவிட்டு
வந்த சரஸ்வதி 'ஐயோ கொலை' என அலறி டிராமா
போட்டார். என்கொயரியில் முன்னுக்குப் பின் முரணாக சரஸ்வதி உளற,
உஷாரான போலீஸ் கறார் ட்ரீட்மெண்ட் கொடுத்தனர்.
கல்யாண மோதிரத்தை கொடுத்து கூலிப்படை செட் செய்து கணவரை கொன்றிருக்கிறார் சரஸ்வதி என
கன்ஃபார்ம் ஆகியுள்ளது. டெரர் பதிபத்தினி!
2
பாயசத்திற்கு முந்து!-ரோனி
எவ்வளவ சிக்கல், பிரச்னை
என்றாலும் சாப்பாடு விஷயத்தில் இந்தியர்கள் அளவுக்கு உலகில் யாரும் பங்க்சுவாலிட்டியாக
இருக்க முடியாது.
பீகாரில் ராஷ்டிரிய
ஜனதாதள தலைவர் லாலுபிரசாத்யாதவின் மூத்தமகன் தேஜ் பிரதாப்புக்கு திருமணம் நடைபெற்றது. மணமகள்
கட்சி எம்எல்ஏவான சந்திரிகா ராயின் மகள் ஐஸ்வர்யா ராய். அரசியல்
திருமணம் என்பதால் லம்பாக சோறு கிடைக்கும் என்று கூடிய தொண்டர் பிளஸ் மக்களின் எண்ணிக்கை
7 ஆயிரத்திற்கும் அதிகம். கல்யாணம், ரிஷப்சனை சிறிது நேரம் ஆர்வமாக கவனித்த மக்கள் ஆர்வமிழந்து சமையலறையை நோக்கி
பல்சர் வேகத்தில் பாய்ந்தனர். சுனாமியாய் வந்த மக்கள்கூட்டத்தை
எதிர்பார்க்காத பாதுகாப்பு ஆட்கள் குச்சிகளுடன் தடுப்பதற்குள் பல்வேறு சாப்பாட்டு ஐட்டங்களை
குண்டானோடு தூக்கிக்கொண்டு ஓடிவிட்டனர். காணாமல் போன பொருட்களுக்கு
கணக்கு எழுதிவருகிறது கேட்டரிங் கம்பெனி.