காதல் படுகொலையை தடுத்த சிங்!
காதல் படுகொலையை
தடுத்த சீக்கியர்!
மதம்,சாதி அறிந்துகொண்டு
காதலிக்கவேண்டும் என்ற அச்சத்தை பிரிவினைவாதிகள் இந்தியாவில் தம் செயல்கள் மூலமாக விதைத்து
வரும் நிலையில் முஸ்லீம் இளைஞனை சீக்கியர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
உத்தர்காண்டின்
நைனிடால் பகுதியைச் சேர்ந்த கிரிஜா கிராமத்தில் அமைந்துள்ள கோயிலில் இளைஞர் ஒருவர்
தன் காதலியைச் சந்திக்க காத்திருந்தார். அவரை சந்தேகத்துடன் நோட்டமிட்ட
காவி அமைப்புகள் இந்து பெண்ணை காதலித்துவருவதும், அவர் முஸ்லீம்
என்பதை அறிந்ததும் வெகுண்டு அவரை தாக்கத் தொடங்கினர். தகவல் தெரிந்து
வந்த துணை ஆய்வாளர் ககன்தீப் சிங், இந்துத்துவ குண்டர்களிடமிருந்து
மீட்டு இளைஞனை ஸ்டேஷனில் அடைக்கலம் கொடுத்து உயிரைக் காப்பாற்றினார். இளைஞரை சீக்கிய போலீஸ்காரர் காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.