இணையத்தை பெண்கள் அதிகம் பயன்படுத்துவதன் காரணம் என்ன?
பாலினச்சுதந்திரம் தரும் இணையம்!
- விக்டர் காமெஸி
செக்ஸ் பற்றிய உரையாடல்களை முடிந்தளவு குறைவாக அல்லது
அறவே இல்லாமல் அதுபற்றி கிசுகிசுக்களை ரசித்த தலைமுறை முன்னர் இருந்தது. இருட்டறையில் முரட்டுக்குத்து, டெட்பூல் பாகங்களை ரசித்து
பார்க்குமளவு ஜென்இசட் முன்னேறியுள்ளதற்கு முக்கிய காரணம், ஸ்மார்ட்போன்களின்
டேட்டாவை முக்கியக் காரணமாக சொல்லலாம்.
வன்முறையின் விதை!
குறிப்பாக பெண்கள் செக்ஸ் பற்றிய அறிவை பெறுவதிலும், சந்தேகங்களை தீர்ப்பதிலும் அருகிலுள்ள தோழிகளிடம் பேசி தெளிவு பெறுவதைவிட இணையத்திலுள்ள
முகமறியாத குழுக்களையே நம்பிக்கையுடன் நாடுகிறார்கள். தெற்காசியாவில்
ஐநூறுக்கு மேற்பட்டவர்களிடம் இதுகுறித்து எடுத்த ஆய்வில் 60 சதவிகித
பேருக்கு பாலியல் கல்வி பள்ளியில் கற்றுத்தரப்படவில்லை என தெரியவந்துள்ளது.
ஏன் இணையத்தை நட்பைவிட முக்கியமாக கருதக்காரணம், அதிலுள்ள வசீகரம் கொண்டு வீடியோக்கள், கேள்விகளுக்கான
பதில்கள். இத்தொழில்நுட்பம் வல்லுறவுக்கு காரணமல்ல, பாலினபாகுபாடுதான் வன்முறைக்கான விதை.
இணையத்தில் தனிமை!
1970 ஆம்ஆண்டு தனிப்பட்ட குறுஞ்செய்திகளை அனுப்பும்
பிபிஎஸ் வசதி அமெரிக்காவில் அறிமுகமானது. தனிக்கணினி வழியாக பலரும்
உரையாடத்தொடங்கும்வழக்கம் அன்றுதான் தோன்றியது. அந்தரங்கமாக உரையாடுவதற்கு
பொது, தனி என பிபிஎஸ் அமைக்கப்பட்டது இதன் வெற்றிக்கு காரணம்.
இன்று பிபிஎஸ் காலாவதியான தொழில்நுட்பம் என்றாலும் அன்று பிரபல வியப்பூட்டும்
தொழில்நுட்மாக கலக்கியது. மாற்றுப்பாலினத்தவர், BDSM போன்ற தன்மை உடையவர்களையும சமூகம் ஒதுக்காமல் அரவணைப்பது இணையத்தை பலரும் பயன்படுத்த
முக்கியக்காரணம். பாலியல் குறித்து இந்தியக்குடும்பங்கள் கள்ள
மௌனம் சாதிப்பது வெப்கேம் குழுக்களோடு பெண்கள் படிக்கும்போது இணைவதில் முடிகிறது.
பெற்றோர், உறவுகளோடு பெறமுடியாத அந்தரங்க சுதந்திரத்தை
இணையம் பெண்களுக்கு அளிக்கிறது. இதுவே ரிவெஞ்ச் போர்ன் வீடியோக்கள்
வெளியீடு போன்ற இணையக்குற்றங்களுக்கு நெடுஞ்சாலை அமைக்கிறது. இந்தியாவில் 35% மட்டுமே இணையப்பயன்பாடு உள்ளதாக
2016 ஆம் ஆண்டு IAMAI அமைப்பு தகவல் தெரிவிக்கிறது.
கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்று இல்லை; கூகுள், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய
நிறுவனங்களும் நம் தகவல்களை பெற்று நம் தேடுதலைக் கணித்து பிரைவசியை குறைத்து வணிகம்
பெருக்குகின்றன. இலவசமாக கொடுப்பது அனைத்தும் பின்னாளில் காசு
வசூலிக்க முடியும் என்ற உறுதியான தைரியத்தினால்தான். இணையம் ஏறத்தாழ
இந்தியர்களின் கலாசாரத்திலும் தன் வேர்களை ஆழமாக பாய்ச்சி வருகிறது.