நேர்காணல்: குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவருக்கு நேர்ந்த அவலம்!
நேர்காணல்
"குழந்தைகளைக் காத்தவருக்கும், குற்றங்கள் செய்தவருக்கும் என்ன வேறுபாடு?"
மருத்துவர் கஃபீல்கான், குழந்தைநலமருத்துவர்.
தமிழில்:
ச.அன்பரசு
உ.பியில் செயல்பட்டு
வந்த பாபா ராகவ்தாஸ் மருத்துவக்கல்லூரியில் கடந்தாண்டு ஆகஸ்டில் 30 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாட்டால் உயிரிழந்தனர்.
விடுமுறையை ரத்து செய்து மருத்துவமனைக்கு திரும்பி தனியார் மூலம் சிலிண்டர்களை
பெற்று குழந்தைகளை காப்பாற்ற முயன்ற மருத்துவர் கஃபீல்கான் சஸ்பெண்ட் உ.பி அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டு எட்டுமாத சிறைவாசத்திற்கு பிறகு பிணையில்
வெளியே வந்துள்ளார்.
கதாநாயகன் போல நூற்றுக்கணக்கானோரால் வரவேற்கப்பட்டிருக்கிறீர்கள். சிறைக்கு செல்லும் முன்பு இதுபோல நிகழும் என்று எதிர்பார்த்தீர்களா?
ஜெயிலில் இருந்தபோது என் குடும்பத்தையும் நண்பர்களையும்
தவிர யாரும் வந்து பார்க்கவில்லை. நூற்றுக்கணக்கான மக்கள் எனக்காக
காத்திருப்பார்கள் என்று நினைக்கவில்லை. தங்களில் ஒருவராக அவர்கள்
நினைத்திருக்கலாம். மருத்துவராக நான் பணியைத்தான் செய்தேன்.
சிறைவாசம் எப்படியிருந்தது?
கொடூர குற்றவாளிகளுடன் அடைக்கப்பட்டிருந்தது விநோதமான
அனுபவம்.
லக்னோ, அலகாபாத், கோரக்பூர்,
டெல்லி என என் சகோதர் வழக்குக்காக அலைந்த உழைப்பு அசாதாரணமானது.
நான் கைதாகும்போது ஒன்பதுமாத குழந்தையாக என் மகளுக்கு விடுதலையான பின்பு
என்னை அடையாளம் தெரியவில்லை. சிறையில் 150 பேர்களுக்கும் ஒரே கழிவறைதான். குடும்பத்தினருக்கு சந்திக்க
அனுமதி தராமல் காவலர்கள் மிரட்டுகிறார்கள். குரானும் சுயமுன்னேற்ற
நூல்களும்தான் என்னைக் காப்பாற்றிவருகிறது.
உத்தரப்பிரதேச அரசு உங்களை வில்லனாக ஊடகங்களில்
சித்தரிக்கிறதே? சிறையில் துன்புறுத்தல்கள் இருந்தனவா?
முதல் கேள்விக்கு உ.பி முதல்வர் யோகிதான் பதில் கூறவேண்டும். பணத்தை பதுக்கிக்கொண்டு
குழந்தைகளுக்கு அவசியமான ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்குவதற்கு இசையவில்லை. அதற்கு காரணம் என எங்களை கைகாட்டுகிறது அரசு. சிறையைப்
பொறுத்தவரை வித்தியாசமான அனுபவம் ஏதுமில்லை. பத்தாண்டுகளாக சிறையிலுள்ளவரிடம்
நல்ல விஷயங்களை செய்ய முயற்சியுங்கள் என்றபோது, "நல்ல விஷயங்கள்
செய்த நீங்களும் மோசமான குற்றங்களை இழைத்த நானும் ஒரே இடத்தில் சிறையில்தானே இருக்கிறோம்.
என்ன வித்தியாசம்?" என்று கேட்ட கேள்வியை
எந்நாளும் என்னால் மறக்கவே முடியாது.
எதிர்காலத்தில் என்ன செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள்.
கோரக்பூரை விட்டு விலகுவதாயில்லை. குழந்தைகளை காக்கும் பணியைத்தான் செய்யப்போகிறேன். ஜாதியோ
மதமோ இதற்கு தடையில்லை. தடை விலகினால் மருத்துவக்கல்லூரியில்
பணிபுரிவேன். இல்லையெனில் தனி மருத்துவமனை தொடங்கி வேலை செய்வேன்.
அவ்வளவுதான்.
தன்னார்வ அமைப்புகள் அல்லது இஸ்லாமிய அமைப்புகளான
ஜாமியத் உல்மா இ ஹிந்த் அல்லது ஜமாத் இ இஸ்லாமி ஆகிய அமைப்புகள் உதவினவா?
இல்லை. சிறையில்
அத்தகை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சந்திக்க வரவில்லை. எனது
சகோதரரை தொடர்பு கொண்டிருப்பார்கள் என்று கூட எனக்கு நம்பிக்கையில்லை. இப்போராட்டம் எனக்கானது மட்டுமல்ல; பிற
மருத்துவர்களுக்குமானதும்தான்.
குழந்தைகள்
இறப்பதற்கு காரணமான விஷயங்கள் உங்களை முன்னிட்டு மறந்துபோய்விட்டன. கோரக்பூரில்
என்னதான் பிரச்னை?
க்யூலக்ஸ்
கொசு மூலம் பரவும் நோய் இது. 1971 ஆம் ஆண்டு முதன்முதலாக
மூளைக்காய்ச்சலின் அறிகுறி கண்டறியப்பட்டது. இருபது
ஆண்டுகளாக கட்டுப்படுத்தப்பட்ட நோய் இன்று பீகார்,உ.பி, பெங்கால், அசாமில்
அச்சுறுத்தும் வகையில் வேகமாக பரவி வருகிறது.