செஃப்பின் உயிரைக்காப்பாற்றிய முஸ்லீம்!
பிரபல செஃப்பை
காப்பாற்றிய முஸ்லீம்!
கருணைக்கு மதமில்லை
என்பதை பிரபல செஃப் விகாஸ் கண்ணா தன் செயலின் மூலம் நிரூபித்துள்ளார். மும்பை
கலவரத்தில் தன்னைக் காப்பாற்றிய முஸ்லீம் குடும்பத்தை சந்தித்து இஃப்தான் உணவருந்தி
ஃபிளாஷ்பேக்கை அசைபோட்டுள்ளார் செலிபிரிட்டி சமையல்கலைஞர்.
1992 ஆம்
ஆண்டு மும்பையில் கலவரம் வெடித்தபோது ஷெரட்டன் ஹோட்டலில் பயிற்சியாளராக இருந்தார் விகாஸ்.
கட்கோபார் ஏரியாவிலிருந்த சகோதரர் என்னவானார் என்ற பயத்தில் அவரைத் தேடிப்போனபோது,
கலவரக்காரர்கள் துரத்த, முஸ்லீம் குடும்பத்தினர்
இரு நாட்கள் அடைக்கலம் கொடுத்து உயிர்காத்து உதவியுள்ளனர். அதோடு
விகாஸின் சகோதரரையும் தேடி அழைத்து வந்து விகாஸை ஒப்படைத்துள்ளனர். "கண்ணீரும் நெகிழ்ச்சியும் நிறைந்த அச்சம்பவத்தில் உதவிய முஸ்லீம் குடும்பத்தை
நினைவுகூரவே ரம்ஜான் நோன்பை அன்றிலிருந்து இன்றுவரை கடைபிடித்துவருகிறேன்"
என சமூகவலைதளத்தில் உணர்வெழுச்சியுடன் எழுதியுள்ளார் விகாஸ்.