டிஎன்ஏ லீக்!
டிஎன்ஏ
லீக்!
டிஎன்ஏ சேவைகளை செய்து
வந்த மைஹெரிடேஜ், இணையக் கொள்ளையர்களிடம் 92 மில்லியன்
வாடிக்கையாளர்களின் தகவல்களை பறிகொடுத்திருக்கிறது. பணம்
தொடர்பான தகவல்களை திருடினால் பிரயோஜனம் உண்டு எதற்கு டிஎன்ஏ தகவல்கள் தேவை?
"நீங்கள் வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்தால் உங்களின் ஜீன்
தகவல்களின் மூலம் உங்களுக்கு வரவிருக்கும் அல்சீமர் போன்ற நோய்களை முன்கூட்டியே
கணித்து கடனை வங்கி வழங்காது போகவும் சான்ஸ் உண்டு" என
பீதி கிளப்புகிறார் லாஸ்ட்லைன் பாதுகாப்பு
நிறுவனத்தைச் சேர்ந்த கியோவன்னி விக்னா. டிஎன்ஏ தகவல்களை
பெறுவதன் மூலம் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட நோய் வரும் வாய்ப்புள்ள
மனிதர்களுக்கான காப்பீட்டுத்திட்டத்தை உருவாக்கி காசு பார்க்க அதிக வாய்ப்புண்டு.
மருத்துவசேவை, இன்சூரன்ஸ் மற்றும் காவல்துறை ஆகிய அமைப்புகளுக்கு டிஎன்ஏ தகவல்கள் அதி
அவசியம். எதிர்காலத்தில் காவல்துறை டிஎன்ஏவை வைத்து தொடர்
குற்றவாளிகளை அடையாளம் கண்டு பின்தொடரும். ஒருவரின் மரபணு
தொடர்பான தகவலை சாதாரண மக்கள் யாரும் புரிந்துகொள்ளமுடியாது. மருத்துவ வல்லுநர்கள் மட்டுமே புரிந்துகொண்டு அதனை பயன்படுத்த முடியும்.
இணையத்தில் தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களை கொடுப்பதை
தவிர்ப்பது நல்லது.